Indian Language Bible Word Collections
Psalms 34:12
Psalms Chapters
Psalms 34 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 34 Verses
1
|
ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும். |
2
|
என் ஆன்மா ஆண்டவரில் பெருமைகொள்ளும்: சிறுமையுற்றோர் இதைக் கேட்டு அக்களிப்பார்களாக. |
3
|
என்னோடு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்: எல்லோரும் சேர்ந்து அவரது பெயரைப் புகழ்ந்தேத்துவோம். |
4
|
நான் ஆண்டவரைத் தேடினேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்: எல்லாவித அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார். |
5
|
அவரை நோக்குங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்: வெட்கத்தால் தலைகுனிய மாட்டீர்கள். |
6
|
இதோ! திக்கற்றவன் கூவியழைக்க, ஆண்டவர் அவன் குரலைக் கேட்டார்: எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார். |
7
|
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார். |
8
|
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் தஞ்சம் புகுவோன் பேறு பெற்றவன். |
9
|
ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அஞ்சுங்கள்: ஏனெனில், அவருக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாது. |
10
|
வலிமையுற்றோர் வறிஞராய்ப் பசியுற்றார்; ஆண்டவரைத் தேடுவோர்க்கோ எந்த நன்மையும் குறைவுபடாது. |
11
|
வாரீர் மக்களே, நான் சொல்வதைக் கேளீர்: உங்களுக்குத் தேவ பயத்தைக் கற்பிப்பேன். |
12
|
வாழ்க்கை மீது பற்றுதல் கொண்டுள்ளவன் யார்? நலன்களைத் துய்க்க நீடிய வாழ்வை விரும்பும் மனிதன் யார்? |
13
|
உன் நாவை நீ தீமையினின்றி காத்திடு: வஞ்சக மொழி பேச வாயெடுக்காதிரு. |
14
|
தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு. |
15
|
ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன. |
16
|
ஆண்டவருடைய முகம் தீயோரை எதிர்த்து நிற்கின்றது: ஆண்டவர் பூமியிலிருந்து அவர்களுடைய நினைவையே எடுத்து விடுவார். |
17
|
நீதிமான்கள் கூக்குரலிட்டனர்; ஆண்டவர் அவர்களுக்குச் செவி சாய்த்தார்: எல்லாத் துன்பங்களினின்றும் விடுவித்தார். |
18
|
உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலேயே உள்ளார் ஆண்டவர்: மனம் நைந்தவர்களைக் காத்தருள்வார். |
19
|
நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார். |
20
|
அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது. |
21
|
தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நீதிமான்களைப் பகைப்பவர்களோ தண்டனைக்குள்ளாவர்கள். |
22
|
தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான். |