Indian Language Bible Word Collections
Psalms 33:21
Psalms Chapters
Psalms 33 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 33 Verses
1
|
நீதிமான்களே, ஆண்டவரில் அகமகிழுங்கள்: நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே. |
2
|
யாழினால் ஆண்டவரைப் புகழுங்கள்: பத்து நரம்பு வீணையால் அவரது புகழ் பாடுங்கள். |
3
|
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்: மகிழ்ச்சிக் குரலில் நன்றாகப் பாடுங்கள். |
4
|
ஏனெனில், ஆண்டவருடைய வார்த்தை நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் உண்மையானவை. |
5
|
நீதியும் நேர்மையும் அவர் விரும்புகிறார்: அவருடைய அருளால் பூமி நிறைந்துள்ளது. |
6
|
ஆண்டவருடைய வார்த்தையால் வானங்கள் உண்டாயின: அவரது சொல்லால் வான் அணிகள் எல்லாம் உருவாயின. |
7
|
குடத்தில் தண்ணீர் எடுப்பது போல் அவர் கடல் நீரை ஒன்றுசேர்க்கிறார்: பாத்திரங்களில் தண்ணீரை வைப்பது போல் ஆழ்கடலை அடைத்து வைத்திருக்கிறார். |
8
|
பூவுலகெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சுவதாக: அதில் வாழ்வோரெல்லாரும் அவருக்கு அஞ்சுவார்களாக. |
9
|
ஏனெனில், அவர் ஒரு வார்த்தை சொல்லவே, எல்லாம் உண்டாயின: அவர் கட்டளையிடவே அவை உருவாயின. |
10
|
மக்கள் இனங்களின் திட்டங்களை ஆண்டவர் சிதறடிக்கிறார்: மக்களின் எண்ணங்களைப் பயனற்றவை ஆக்குகிறார். |
11
|
ஆண்டவருடைய திட்டங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: அவருடைய எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். |
12
|
ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொள்ளும் மக்கள் இனம் பேறு பெற்றது: தமது உரிமைப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர்கள். |
13
|
வானுலகிலிருந்து ஆண்டவர் பார்க்கிறார்: ஆதாமின் மக்கள் எல்லாரையும் பார்க்கிறார். |
14
|
பூவில் வாழ்வோர் அனைவரையும், அவர் தம் உறைவிடத்தினின்று நோக்குகிறார். |
15
|
அனைவருடைய நெஞ்சங்களையும் உருவாக்கின அவர், அவர்கள் செய்வதையெல்லாம் கவனிக்கிறார். |
16
|
அரசன் வெற்றி பெறுவது பெரிய சேனையினால் அன்று: போர் வீரன் தன்னைக் காத்துக் கொள்வது மிகுந்த வன்மையினால் அன்று. |
17
|
குதிரைகளால் வெற்றி பெறுவது நிச்சயமன்று: அவற்றின் வலிமை பாதுகாப்பு தரும் என்பது உறுதியன்று. |
18
|
இதோ தமக்கு அஞ்சுபவர்களை ஆண்டவர் பார்க்கிறார்: தமது அருளை நம்புவோரை அவர் கண் நோக்குகிறார். |
19
|
அவர்களைச் சாவினின்று விடுவிக்கவும், பஞ்ச காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்கவுமே அவர் பார்க்கிறார். |
20
|
நம் ஆன்மா ஆண்டவருக்காகக் காத்திருக்கின்றது: அவரே நமக்கு உதவியும் கேடயமுமாயிருக்கிறார். |
21
|
அவரில் நம் உள்ளம் மகிழ்கின்றது: அவருடைய திருப்பெயரில் நம்பிக்கை வைக்கிறோம். |
22
|
ஆண்டவரே, உம் இரக்கம் எம்மீது இருப்பதாக: நாங்கள் உம்மை நம்பியிருக்கும் அளவுக்கு உம் இரக்கமும் இருப்பதாக. |