Indian Language Bible Word Collections
Psalms 26:11
Psalms Chapters
Psalms 26 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 26 Verses
1
|
ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும், ஏனெனில் என் நடத்தை மாசற்றது: ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தேன், என் மனம் தளர்ச்சியுறவில்லை. |
2
|
ஆண்டவரே, என்னை ஆராய்ந்து சோதித்துப் பாரும்: என் மனத்தையும் இதயத்தையும் துருவிப்பாரும். |
3
|
உமது அருளன்பு என் மனக்கண்முன் உள்ளது: நீர் காட்டிய உண்மைப் பாதையில் நான் நடக்கிறேன். |
4
|
தீயவர்களோடு நான் அமர்வதில்லை: வஞ்சக மனத்தினரோடு நான் சேர்வதில்லை. |
5
|
தீமை செய்வோரின் கூட்டத்தை நான் வெறுக்கிறேன்: அக்கிரமிகளோடு நான் அமர்வதில்லை. |
6
|
ஆண்டவரே, நான் மாசற்ற மனத்தோடு என் கைகளைக் கழுவி, |
7
|
உமது புகழை அனைவருக்கும் வெளிப்படுத்தி, உமது அற்புதச்செயல்கள் அனைத்தையும் எடுத்து உரைப்பவனாய் உமது பீடத்தை வலம் வருகிறேன். |
8
|
ஆண்டவரே, நீர் வாழும் உமது கூடார இல்லத்தின் மீது பற்றுதல் கொண்டேன்: உமது மாட்சிமை தங்கும் உமது கூடாரத்தைப் பெரிதும் விரும்பினேன். |
9
|
என்னைப் பாவிகளோடு சேர்த்து உன் ஆன்மாவை எடுத்து விடாதேயும்: இரத்த வெறியர்களோடு என் உயிரை எடுத்துக் கொள்ளதேயும். |
10
|
அவர்களுடைய கைகள் அக்கிரமம் நிரம்பியவை: அவர்கள் வலக்கரம் கைக்கூலி நிறைய வாங்குபவை. |
11
|
நானோ மாசற்றவனாய் நடந்து கொள்ளுகிறேன்: என் மீது இரக்கம் வைத்து என்னை மீட்டுக் கொள்ளும். |
12
|
நான் நடப்பது நேரிய பாதையாகும்: சபையில் நான் ஆண்டவரை வாழ்த்துவேன். |