Indian Language Bible Word Collections
Psalms 24:8
Psalms Chapters
Psalms 24 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 24 Verses
1
|
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன: பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே. |
2
|
ஏனென்றால், கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே: ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே. |
3
|
ஆண்டவரது மலை மீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? |
4
|
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன், பயனற்றதில் மனத்தை செலுத்தாதவன்: தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன் . |
5
|
இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்: இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான். |
6
|
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே: யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே. |
7
|
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்! |
8
|
மாட்சி மிகு மன்னர் இவர் யாரோ?' 'வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்: போரில் வல்லவரான ஆண்டவரே இவர்!' |
9
|
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்! |
10
|
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?' சோனைகளின் ஆண்டவரே இவர்: மாட்சிமிகு மன்னர் இவரே!' |