Indian Language Bible Word Collections
Psalms 147:12
Psalms Chapters
Psalms 147 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 147 Verses
1
|
அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே. |
2
|
ஆண்டவர் யெருசலேமை அமைக்கிறார்: சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று சேர்க்கிறார். |
3
|
உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார்: அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். |
4
|
விண்மீன்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறார்: ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். |
5
|
நம் ஆண்டவர் மிக உயர்ந்தவர், வல்லமை மிக்கவர்: அவருடைய ஞானத்துக்கு அளவேயில்லை. |
6
|
தாழ்ந்தவர்களை ஆண்டவர் தூக்கிவிடுகிறார்: கெட்டவர்களைத் தரைமட்டும் தாழ்த்தி விடுகிறார். |
7
|
நன்றியுணர்வோடு ஆண்டவருக்குப் பாடுங்கள்: யாழ்கொண்டு நம் இறைவனுக்கு இசை எழுப்புங்கள். |
8
|
வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே. |
9
|
கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே. |
10
|
குதிரைகளின் பலத்தைப் பொருட்படுத்துபவர் அல்லர் அவர்: மனிதனின் கால் பலத்தைத் தேடுபவர் அல்லர். |
11
|
அவருக்கு அஞ்சுவோரே அவருக்கு உகந்தவர்: அவரது நன்மைத் தனத்தை நம்புவோரே அவருக்கு உகந்தவர். |
12
|
யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய். |
13
|
ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார். |
14
|
அமைதி நிலவ உன் எல்லைகளைக் காத்தார்: கோதுமை வளத்தால் உனக்கு நிறைவு அளிக்கிறார். |
15
|
உலகுக்குத் தம் ஆணையை விடுக்கிறார்: விரைந்து செல்கிறது அவருடைய வார்த்தை. |
16
|
வெண் கம்பளி போல் பனி பொழியச் செய்கிறார்: உறை பனியைச் சாம்பல் போல் இறைக்கிறார். |
17
|
அப்பத்துண்டெனக் கல்மழை பொழிகிறார்: அவர் உண்டாக்கும் குளிரால் தண்ணீர் உறைந்து போகும். |
18
|
அவர் ஒரு வார்த்தை சொல்ல, உறைந்தது உருகிவிடும்: தம் காற்றை ஏவி விட, உருகிய நீர் ஓடத் தொடங்கும். |
19
|
யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார். |
20
|
வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா! |