Indian Language Bible Word Collections
Psalms 146:1
Psalms Chapters
Psalms 146 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 146 Verses
1
|
அல்லேலூயா! நெஞ்சே நீ ஆண்டவரைப் புகழ்வாய். |
2
|
என் வாழ்நாளில் ஆண்டவரைப் புகழ்வேன்: என் உயிருள்ள வரையில் நான் கடவுளுக்குப் புகழ் பாடுவேன். |
3
|
தலைவர்களிடம் நம்பிக்கை வையாதீர்கள்: மனிதனை நம்ப வேண்டாம்; அவனால் மீட்பு இல்லை. |
4
|
அவனுடைய ஆவி பிரிய, தான் தோன்றிய மண்ணுக்கே திரும்புகிறான்: அப்போது அவன் திட்டங்கள் எல்லாம் பாழாகும். |
5
|
யாக்கோபின் இறைவன் யாருக்குத் துணை புரிகிறாரோ அவன் பேறுபெற்றவன்: தம் கடவுளாகிய ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பான். |
6
|
அவரே வானத்தையும் வையத்தையும் கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினார்: அவர் என்றென்றும் சொல் தவறாதவர். |
7
|
துன்புறுத்தப்படுவோர்க்கு நீதி வழங்குகிறார்: பசியுற்றோர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டவர்களை ஆண்டவர் விடுவிக்கிறார். |
8
|
குருடருடைய கண்களை ஆண்டவர் திறந்து விடுகிறார்; தாழ்த்தப்பட்டவர்களை ஆண்டவர் தூக்கி விடுகிறார்; நீதிமான்கள் மீது ஆண்டவர் அன்பு கூர்கிறார். |
9
|
அந்நியரை ஆண்டவர் காப்பாற்றுகிறார்; அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்: பாவிகளின் திட்டங்களைக் கலைத்து விடுகிறார். |
10
|
நித்தியத்துக்கும் ஆண்டவர் அரசாள்வார்: சீயோனே, உன் இறைவன் தலைமுறை தலைமுறையாக ஆள்வார். |