Indian Language Bible Word Collections
Psalms 140:11
Psalms Chapters
Psalms 140 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 140 Verses
1
|
ஆண்டவரே, தீயோனிடமிருந்து என்னை விடுவியும்: கொடுமை செய்வோனிடமிருந்து என்னைக் காத்தருளும். |
2
|
தம் மனத்தில் தீமையை நினைப்பவர்களிடமிருந்து என்னை விடுவியும்: எந்நாளும் சண்டை சச்சரவுகளைக் கிளப்புவோரிடமிருந்து என்னை காத்தருளும். |
3
|
அவர்கள் தம் நாவுகளைப் பாம்பின் நாவைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்: அவர்கள் உதட்டின் கீழ் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு. |
4
|
ஆண்டவரே, தீயவன் கையினின்று என்னை மீட்டுக் கொள்ளும், கொடுமை செய்பவனிடமிருந்து என்னைக் காத்தருளும்: அவன் என்னைத் தடுக்கி விழச் செய்யப் பார்க்கிறான். |
5
|
செருக்குற்றோர் எனக்கு மறைவாகக் கண்ணி வைக்கிறார்கள்: வலை போல் எனக்குக் கண்ணி விரிக்கிறார்கள், வழியோரம் எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். |
6
|
நானோ ஆண்டவரை நோக்கி வேண்டுவது, 'நீரே என் இறைவன்': ஆண்டவரே, என் குரலைக் கேட்டருளும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். |
7
|
ஆண்டவரே, இறைவனே, எனக்கு வல்லமை மிக்க துணையானவரே, போர் நிகழும் நாளில் என் தலைக்குக் கவசமாய் இருப்பவர் நீரே. |
8
|
ஆண்டவரே, தீயவனின் விருப்பப்படி நிகழ விடாதேயும்: அவனுடைய எண்ணங்கள் நிறைவேற விடாதேயும். |
9
|
என்னைச் சூழ்பவர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்: அவர்கள் பேசும் தீமை அவர்கள் மேலே விழுவதாக. |
10
|
நெருப்புத் தழல் அவர்கள் மேல் விழுவதாக: மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக. |
11
|
தீ நாக்கு படைத்த மனிதன் உலகில் நெடுநாள் வாழ்வதில்லை: கொடுமை செய்பவன் மீது திடீரெனத் தீமைகள் வந்து விழும். |
12
|
ஏழைக்கு ஆண்டவர் நீதி வழங்குவார்: எளியவர்களுக்கு நியாயம் கூறுவாரென அறிவேன். |
13
|
நீதிமான்களோ உமது பெயரைக் கொண்டாடுவர்: நேர்மையுள்ளவர்கள் உம் திரு முன் வாழ்வர் என்பது உறுதி. |