Indian Language Bible Word Collections
Psalms 109:20
Psalms Chapters
Psalms 109 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Psalms Chapters
Psalms 109 Verses
1
|
என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாயிராதீர். |
2
|
தீயவரும் வஞ்சகரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசினர். |
3
|
பகை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்: காரணமெதுவுமின்றி என்னை வதைத்தனர். |
4
|
நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன். |
5
|
நன்மைக்குப் பதிலாக அவர்களெனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் பகைமையே காட்டினர். |
6
|
அவனுக்கெதிராகத் தீயவனைத் தூண்டிவிடும்: அவனை அவன் குற்றம் சாட்டுவானாக. |
7
|
நியாயம் விசாரிக்கையில் அவன் தண்டனைக்குள்ளாகட்டும்: அவன் செய்யும் வேண்டுகோள் வீணாகட்டும். |
8
|
அவனுடைய வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனுடைய சொத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்ளட்டும். |
9
|
அவனுடைய மக்கள் அனாதைகளாகட்டும்: அவன் மனைவி விதவையாகட்டும். |
10
|
அவனுடைய மக்கள் நிலையின்றி அலைந்து பிச்சை எடுக்கட்டும்: பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும். |
11
|
கடன் கொடுத்தவன் அவன் சொத்தையெல்லாம் பறித்துக் கொள்ளட்டும்: அவன் உழைப்பின் பயனை அந்நியர்கள் பிடுங்கிக் கொள்ளட்டும். |
12
|
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனுமில்லாதிருக்கட்டும்; திக்கற்ற அவன் பிள்ளைகள் மேல் யாரும் இரங்காதிருக்கட்டும். |
13
|
அவன் சந்ததி அடியோடு தொலையட்டும்: இரண்டாம் தலைமுறைக்குள் அவனுடைய பெயர் இல்லாது போகட்டும். |
14
|
அவனுடைய முன்னோர்களின் பாவங்களை ஆண்டவர் நினைத்துக் கொள்ளட்டும்: அவனுடைய தாய் செய்த பாவம் நீங்காதிருக்கட்டும். |
15
|
அவைகள் என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்: அவர்களுடைய நினைவை அடியோடு எடுத்து விடட்டும். |
16
|
ஏனெனில், அவனும் யாருக்கும் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியவனையும் ஏழையையும் துன்புறுத்தினவன் அவன்: நெஞ்சம் நொறுங்குண்டவனைக் கொன்றொழிக்கத் தேடியவன். |
17
|
சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன் மீது விழட்டும்: ஆசி கூறுவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனை விட்டகலட்டும். |
18
|
சாபனையே அவன் தன் ஆடையாக அணியட்டும்: உடலில் தண்ணீர் ஊறுவது போல, எலும்பில் எண்ணெய் தோய்ந்திருப்பது போல சாபனை அவனுக்குள் இறங்கட்டும். |
19
|
அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்: நாள்தோறும் அவன் கட்டும் கச்சைப் போல் இருக்கட்டும். |
20
|
என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீமை பேசுவோருக்கும், ஆண்டவர் அளிக்கும் பிரதிபலனாய் இது இருப்பதாக. |
21
|
ஆனால் ஆண்டவராகிய இறைவா, நீர் உமது பெயரின் பொருட்டு என்னை ஆதரியும்: ஏனெனில், கருணை மிக்கது உம் இரக்கம், என்னை மீட்டருளும். |
22
|
நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. |
23
|
மறைந்து போகும் நிழலைப் போல் நான் மறைகின்றேன்: வெட்டுக்கிளியைப் போல நான் காற்றில் அடிபடுகின்றேன். |
24
|
நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் ஊனுடல் பலமற்று நொந்து போகிறது. |
25
|
நானோ அவர்களுடைய நிந்தனைக்குரியவன் ஆனேன்; என்னைப் பார்க்கிறவர்கள் தலையை அசைக்கிறார்கள். |
26
|
ஆண்டவரே, என் இறைவா, எனக்குதவியாக வாரும்: உமது இரக்த்திற்கேற்ப என்னை மீட்டுக்கொள்ளும். |
27
|
இது உம் கைவேலையென்று அவர்கள் அறியட்டும்: ஆண்டவரே, இது உம் செயலென்று அவர்களுக்குத் தெரியட்டும். |
28
|
அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும்: என்னை எதிர்த்து எழும்பினால் பின்னடைந்து போகட்டும்; உம் ஊழியனோ அகமகிழட்டும். |
29
|
என்னைக் குற்றம் சாட்டுவோரை மானக்கேடு ஆட்கொள்வதாக: வெட்கம் அவர்களைப் போர்வை போல் போர்த்துவதாக. |
30
|
என் நாவினால் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: மக்கள் பலரிடையில் அவரைப் போற்றுவேன். |
31
|
ஏனெனில், ஏழையின் வலப்பக்கம் அவர் நிற்கிறார். குற்றம் சாட்டி அவனை ஒறுப்போரிடமிருந்து அவனைக் காக்க நிற்கிறார். |