Indian Language Bible Word Collections
Proverbs 8:33
Proverbs Chapters
Proverbs 8 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Proverbs Chapters
Proverbs 8 Verses
1
ஞானம் கூக்குரலிடுகிறதில்லையோ ? விவேகம் தன் ஓசையை வெளிப்படுத்துகிறதில்லையோ ?
2
அது வழியின்மேல் உயர்ந்த மலைகளிலும் நடுவழிகளிலும் நின்று கொண்டு,
3
நகரின் கதவுகள் அண்மையிலும் வாயில்களிலும் நின்று பேசிச் சொல்வதாவது:
4
ஓ மனிதரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன். என் குரலோசை மனித மக்களை நோக்கி ஒலிக்கிறது.
5
சிறுவர்களே, சூட்சத்தை அடையுங்கள். ஞானமற்றோரே, சிந்தித்து உணர்வு பெறுங்கள்.
6
நான் மேலான காரியங்களைக் குறித்துப் பேசப்போகிறபடியால், கேளுங்கள். நேர்மையானவர்களைப் போதிப்பதற்காக உன் உதடுகள் திறக்கப்படும்.
7
என் வாய் உண்மையைக் கற்பிக்கும். என் உதடுகள் அக்கிரமத்தை வெறுக்கும்.
8
என் உரைகள் யாவும் நீதியானவை. அவற்றில் தீங்கும் பொல்லாப்பு முள்ளது எதுவுமே கிடையாது.
9
அவை அறிவுடையோர்க்கு நேர்மையானவையும், அறிவால் கண்டுபிடிப்பவர்களுக்கு நீதியானவையுமாய் இருக்கின்றன.
10
பணத்தையன்று, என் போதகத்தையே பெற்றுக்கொள்ளுங்கள். பசும் பொன்னைவிட என் படிப்பினையையே அதிகமாய் விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.
11
ஞானம் மிக விலை யுயர்ந்தது, அனைத்திலும் அதிக உத்தமமானது. நாடத்தக்கது எதுவும் அதற்கு இணையாகக் கூடியதன்று.
12
ஞானம் என்னும் நான் இறைவனின் திட்டத்தில் வாழ்கின்றேன்; கற்றறிந்த சிந்தனைகளின் இடையிலும் இருக்கின்றேன்.
13
தெய்வ பயம் தீமையைப் பகைக்கின்றது. நானும் அகந்தையையும் வீம்பையும் தீயவழியையும், இரு பொருள்பட மொழியும் நாவையும் வெறுக்கிறேன்.
14
ஆலோசனையும் நடுநீதியும் என்னுடையவை; விவேகமும் என்னுடையது; வலிமையும் என்னுடையதே.
15
அரசர் ஆள்வதும், சட்டங்கள் செய்வோர் நியாயமானவைகளைக் கற்பிப்பதும் என்னாலேதான்.
16
என்னாலேயே தலைவர்கள் கட்டளையிட்டும், வல்லவர்கள் நீதியை விதித்தும் வருகிறார்கள்.
17
என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன். என்னை நோக்கிய வண்ணம் அதிகாலையில் விழிப்பவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
18
சொத்தும் மகிமையும் மேலான செல்வமும் நீதியும் என்னோடு இருக்கின்றன.
19
ஏனென்றால், என் கனி பொன்னையும் இரத்தினக் கல்லையும்விட அருமையானதும், என் தளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளியை விட அதிக நலமுமாய் இருக்கின்றன.
20
நான் நீதியின் பாதைகளிலும் நியாய வழிகள் மத்தியிலும் உலாவுகின்றேன்.
21
இவை அனைத்தும் என்னை நேசிக்கின்றவர்களைச் செல்வராக்கவும் அவர்களுடைய செல்வங்களை நிறைக்கும்படியாகவுமே.
22
ஆண்டவர் தம் வழிகளின் தொடக்கத்திலேயே, ஆதியில் எதையும் படைக்குமுன்னரே, என்னை உரிமை கொண்டிருந்தார்.
23
ஆதியில், பூமி உண்டாகு முன்னமே, நித்தியம் தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்.
24
பாதாளங்கள் இன்னமும் இருக்கவில்லை; நானோ ஏற்கெனவே கருத்தரிக்கப்பட்டிருந்தேன். நீரூற்றுகள் இன்னும் புறப்படலில்லை;
25
பாரச் சுமையுள்ள மலைகளும் இன்னும் உண்டாகவில்லை; நானோ குன்றுகளுக்கு முன்னமே பிறப்பிக்கப்பட்டிருந்தேன்.
26
இன்னும் நிலத்தையும் ஆறுகளையும் உலகின் துருவங்களையும் (கடவுள்) படைக்கவில்லை.
27
அவர் வான மண்டலங்களை நிறுவ நினைக்கையிலும் நான் கூடவிருந்தேன். அவர் நிச்சயமான சட்டத்தாலும் எல்லைகளாலும் பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும்,
28
அவர் மேலே வானத்தை உறுதிப்படுத்தி நீர்த்திரள்களை முறையாக நிறுத்தி வைக்கையிலும், கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும்,
29
கடலுக்குக் கோடி கட்டித் தன் எல்லையைக் கடக்காதபடி நீருக்குச் சட்டம் அமைக்கையிலும், பூமியின் அடித்தளங்களை நிறுத்திடுகையிலும்,
30
அவரோடுதானே நான் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். நாள்தோறும் மகிழ்ந்துகொண்டும், எக்காலத்தும் அவர்முன்பாக விளையாடிக் கொண்டும்,
31
எல்லா உலகத்திலும் விளையாடிக் கொண்டும், இருந்தேன். என் மகிழ்ச்சியோ மனித மக்களுடன் இருத்தலேயாம்.
32
ஆகையால், என் மக்களே, இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள். என் வழிகளைக் காப்பவர் எவரோ அவரே பேறுபெற்றோர்.
33
என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளாய் இருங்கள்; அதை இகழ்ந்து தள்ளி விடாதீர்கள்.
34
நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாயிலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பேறுபேற்றவன்.
35
என்னைக் கண்டுபிடிப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக்கொள்வான்.
36
ஆனால் எனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்பவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துவான். என்னைப் பகைக்கின்ற அனைவரும் சாவை நேசிக்கின்றார்கள்.