இந்தப் பெண்கள் தங்கள் (தேவர்களுக்குப்) படைத்த பலிகளுக்கு அவர்களை வரவழைத்தார்கள். அவர்களும் அவ்வாறே போய், படைக்கப்பட்டவைகளை உண்டு விக்கிரக ஆராதனை செய்தார்கள்.
அவர் மோயீசனை நோக்கி: நமது கோபம் இஸ்ராயேல் மக்களை விட்டு நீங்கும் பொருட்டு நீ மக்களின் தலைவர்கள் எல்லாரையும் பிடித்து, வெளிப்படையாய் அவர்களைத் தூக்குமரத்திலே தூக்கிடு என்றார்.
அப்பொழுது மோயீசனும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும்ஆசாரக் கூடாரவாயிலுக்கு முன்பாக அழுது கொண்டிருக்கையில், இதோ எல்லாரும் பார்க்க ஓர் இஸ்ராயேலன் மதியானியப் பெண்ணான ஒரு வேசியின் வீட்டிலே நுழைந்தான்.
விபசாரம் நடக்கும் வீட்டில் அவனைப் பின்தொடர்ந்து போய், அவனையும் அந்தப் பெண்ணையும் மறைவிடத்திலே குத்திக் கொன்றுவிட்டான். அதனாலே இஸ்ராயேலயர் மீது விழுந்திருந்த வாதை நீங்கிப் போயிற்று.
நாமே நமதுகடுங்கோபத்தில் இஸ்ராயேல் மக்களை வேரறுக்க இருக்கையிலே, குருவாகிய ஆரோனின் புதல்வனான எலெயஸாரின் மகன் பினேயஸ் நம்மை அப்படிச் செய்யவிடாமல், தானே அவர்கள் மேல் கோபங்கொண்டவனாய் அவர்களைக் கண்டித்ததே நல்லது. அவன் தன் பக்தி வைராக்கியத்தினால் இஸ்ராயேலர் மேல் நமக்கு உண்டான கோபத்தைத் தணித்தான்.
அவன் தன் கடவுளுக்காகப் பக்தி வைராக்கியம் காண்பித்து இஸ்ராயேல் மக்களுடைய துரோகத்திற்குப் பரிகாரம் செய்தமையால் அவனுக்கும் அவனுக்குப்பின் அவன் சந்ததிக்கும் நித்திய குருப்பட்டத்துக்குரிய உடன்படிக்கையை நிறுவுகின்றோம் என்றும் அவனுக்குச் சொல்வாய் என்றருளினார்.
ஏனென்றால் அவர்கள் (முதலிலே) உங்களுக்கு விரோதம் செய்ததுமன்றி, பீல் பேகோரின் காரியத்திலும், மதியானியப் பிரபுவின் புதல்வியும் அவர்களின் சகோதரியுமான கொஸ்பியின் காரியத்திலும், அவர்கள் உங்களுக்கு வலைவிரித்து மோசம் செய்தார்கள் என்றார்.