தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டார். பின்பு ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். அவர்கள் கூட்டத்துக்குப் பரிமாறினர்.
அவர் பெருமூச்சுவிட்டு, "இத்தலைமுறை அருங்குறி கேட்பானேன்? உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறைக்கு அருங்குறி எதுவும் அளிக்கப்படாது" என்றார்.
அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போனார். வழியில் தம் சீடரை நோக்கி, "மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்.
விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானதூதரோடு வரும்போது வெட்கப்படுவார்" என்றார்.