கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.
என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான். இதனால் அனைவரும் திகைப்புற்று, "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதேயில்லை" என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
அவர் வழியே போகையில் அல்பேயுவின் மகன் லேவி, சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி. "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.
அவருடைய வீட்டில் இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர். ஏனெனில், அவரைப் பின்தொடர்ந்தவர் பலர்.
பரிசேயரைச் சேர்ந்த மறைநூல் அறிஞர், அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதைக் கண்டு அவருடைய சீடரை நோக்கி, "உங்கள் போதகர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதேன்?" என்றனர்.
ஒருநாள் அருளப்பருடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்தனர். அப்பொழுது சிலர் அவரிடம் வந்து, "அருளப்பருடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருக்க, உம்முடைய சிடர் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.
அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.