பாஸ்காவும், புளியாத அப்பத் திருவிழாவும் வர இரண்டு நாள் இருந்தது. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் சூழ்ச்சியாய் அவரைப் பிடித்துக் கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்தார்கள்.
பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் அவர் இருந்தார். அங்கே பந்தி அமர்ந்திருக்கும்போது, பெண் ஒருத்தி நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழைக் கொண்டுவந்து உடைத்து அவருடைய தலையில் ஊற்றினாள்.
ஏனெனில், ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மைசெய்ய முடியும். நானோ உங்களோடு எப்போதும் இருக்கப்போவதில்லை.
அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவனும் அவரை எவ்வாறு காட்டிக் கொடுக்கலாம் என வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
புளியாத அப்பத் திருவிழாவின் முதல் நாளில் பாஸ்காச் செம்மறியைப் பலியிடுவார்கள். அன்று சீடர் அவரிடம், "நீர் பாஸ்காப் பலியுணவை உண்ண நாங்கள் எங்கே போய் ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்?" என்று கேட்டனர்.
அங்கே நமக்கு ஏற்பாடுசெய்யுங்கள்" என்று சொல்லியனுப்பினார். சீடர்களும் போய் நகரை அடைந்து தங்களுக்கு அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
அவர்கள் பந்தியமர்ந்து உண்ணும்பொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கோ ஐயோ, கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
மேலும், "அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்" என்றார்.
திரும்பவும் வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன. என்ன மறுமொழி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று கூறி அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
"கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.
அவரோ மீண்டும் மறுத்தார். மீளவும் சிறிது நேரத்திற்குப்பின் அங்கு இருந்தவர்கள் இராயப்பரை நோக்கி, "உண்மையாக நீ அவர்களுள் ஒருவன். ஏனெனில், நீ கலிலேயன்" என்றார்கள்.
உடனே இரண்டாம் முறையும் கோழி கூவிற்று. "இரு முறை கோழி கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று தமக்கு இயேசு சொன்னதை இராயப்பர் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தி அழலானார்.