இயேசு அவர்கள்கூடப் போனார். வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி," ஆண்டவரே, இவ்வளவு தொந்தரை வேண்டாம்; நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும் எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால், போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால், வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, ' இதைச் செய் ' என்றால், செய்கிறான் " என்றான்.
அதைக் கேட்ட இயேசு அவனை வியந்து தம்மைப் பின்தொடரும் மக்கட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
அனைவரையும் அச்சம் ஆட்கொள்ள, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
அவர்கள் அவரிடம் வந்து, "' வரப்போகிறவர் நீர்தாமோ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ? என்று கேட்குமாறு ஸ்நாபக அருளப்பர் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.
அருளப்பருடைய தூதர்கள் சென்ற பின்பு அவரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்கு இயேசு சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை. ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு, அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று, கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள். ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.
பொது இடத்தில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அழைத்து, ' நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம், நீங்கள் அழவில்லை ' என்று கூறும் சிறுவரைப் போன்றவர்கள் இவர்கள்.
இதோ! பாவி ஒருத்தி அந்நகரிலே இருந்தாள். பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப்போகிறார் என்று அறிந்து பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள்.
அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.
அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு, "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், " இவளைப் பார்த்தீரா? நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.
அதனால் நான் உமக்குச் சொல்வதாவது: அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான் " என்றார்.