Indian Language Bible Word Collections
Luke 17:18
Luke Chapters
Luke 17 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Luke Chapters
Luke 17 Verses
1
மேலும், இயேசு தம் சீடரை நோக்கி, "இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!
2
அவன் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, அவன் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.
3
எச்சரிக்கையாயிருங்கள். " உன் சகோதரன் குற்றம் செய்தால் அவனைக் கடிந்துகொள். மனம் வருத்தினால் அவனை மன்னித்துவிடு.
4
அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, 'நான் மனம் வருந்துகிறேன்' என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.
5
பின்பு அப்போஸ்தலர்கள், "எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" என்று ஆண்டவரைக் கேட்டார்கள்.
6
ஆண்டவரோ, "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இம்முசுக்கட்டை மரத்தை நோக்கி, 'வேருடன் பெயர்ந்து கடலில் ஊன்றிக்கொள்' என்பீர்களாகில், உங்களுக்கு அது கீழ்ப்படியும்.
7
"உழுவதற்கோ மேய்ப்பதற்கோ உங்களிடம் ஓர் ஊழியன் இருந்தால், அவன் வயலிலிருந்து திரும்பி வரும்பொழுது, 'நீ உடனே என்னோடு வந்து சாப்பிடு' என்று உங்களுள் எவனாவது சொல்லுவானா?
8
மாறாக, 'எனக்குச் சாப்பாடு ஆயத்தம்செய். உன் இடையை வரிந்துகட்டிக்கொண்டு நான் உண்டு குடிக்குமளவும் எனக்குப் பணிவிடைசெய்; பின்பு நீ உண்டு குடிக்கலாம்' என்று சொல்லமாட்டானா?
9
தான் கட்டளையிட்டதைச் செய்ததற்காகத் தன் ஊழியனுக்கு நன்றி சொல்வானா?
10
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்தபின், 'நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்" என்றார்.
11
அவர் யெருசலேமுக்குப் போகையில், சமாரியா, கலிலேயா நாடுகள்வழியாகச் சென்றார்.
12
ஓர் ஊருக்குள் வரும்பொழுது, தொழுநோயாளிகள் பத்துப்பேர் அவருக்கு எதிரே வந்தனர். தொலைவில் நின்றுகொண்டே,
13
"குருவே, இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்" என்று உரக்கக்கூவினர்.
14
அவர்களைக் கண்டதும், "நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் " என்றார். அவ்வாறே செல்லும்போது அவர்கள் குணமடைந்தனர்.
15
அவர்களுள் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டு உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு, திரும்பி வந்து,
16
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான். அவனோ சமாரியன்.
17
இயேசு அவனைப் பார்த்து, 'பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18
திரும்பி வந்து கடவுளை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத்தவிர வேறு ஒருவரையும் காணோமே! " என்றார்.
19
மேலும், "எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று அவனிடம் கூறினார்.
20
கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் வினவ, அவர் மறுமொழியாக, "கடவுளின் அரசு கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
21
'இதோ இங்கே! அதோ அங்கே! 'என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.
22
மேலும் அவர் சீடர்களிடம் மனுமகனுடைய நாட்களில் ஒன்றையாவது காண வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆனால் காண மாட்டீர்கள்.
23
உங்களிடம், 'இதோ இங்கே! அதோ அங்கே!' என்பார்கள். நீங்களோ போகவேண்டாம்; அவர்கள்பின் ஓடவேண்டாம்.
24
மின்னல் வானத்தின் ஒரு முனையில் மின்னி எதிர்முனைக்குப் பாய்வதுபோலவே, மனுமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
25
ஆனால் முதலில் அவர் மிகவும் பாடுபட்டு இந்தத் தலைமுறையால் புறக்கணிக்கப்பட வேண்டும்.
26
நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மனுமகன் வரும் காலத்திலும் நடக்கும்.
27
நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை மக்கள் உண்டு குடித்ததும், பெண் கொண்டு கொடுத்தும் வந்தனர். பெருவெள்ளம் வந்து அனைவரையும் அழித்தது.
28
அவ்வாறே, லோத்தின் காலத்திலும் நடந்தது: உண்டு குடித்தனர்; விற்று வாங்கினர்; நட்டனர். கட்டினர்.
29
லோத்து சோதோமை விட்டுச் சென்ற நாளில், வானிலிருந்து தீயும் கந்தகமும் பெய்து எல்லாரையும் அழித்தது.
30
மனுமகன் வெளிப்படும் நாளிலும் அவ்வாறே இருக்கும்.
31
"அந்நாளில் கூரைமேல் இருப்பவன், வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுப்பதற்கு இறங்கவேண்டாம். அப்படியே வயலில் இருப்பவன் திரும்பி வரவேண்டாம்.
32
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
33
தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
34
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அந்த இரவில் ஒரே படுக்கையில் இருவர் இருப்பர், ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.
35
இரு பெண்கள் சேர்ந்து மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்."
36
அதற்கு அவர்கள், "எங்கே ஆண்டவரே?" என்றார்கள்.
37
அவரோ, "பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்" என்றார்.