ஒரு மனிதன் ஆண்டவருக்குப் பலியாகக் காணிக்கையை ஒப்புக்கொடுக்கிற போது, அவனது காணிக்கை மிருதுவான மாவாயிருந்தால், அவன் அதன்மேல் எண்ணெய் வார்த்துத் தூபவகைகளையும் இட்டு, ஆரோனின் புதல்வர்களாகிய குருக்களிடம் கொண்டு போவான்.
அவர்களில் ஒருவன் மிருதுவான மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடியும் தூபவகை முழுவதையும் எடுத்துக் கொண்டு, பீடத்தின் மீது நினைவுச் சின்னமாகவும் ஆண்டவருக்கு நறுமணமாகவும் வைப்பானாக.
நீ படைப்பது அடுப்பில் ஏற்றிச் சமைத்த போசனப் பலியானால், அது எண்ணெய் தெளிக்கப்பட்ட புளியாத அப்பங்களாகவும், எண்ணெய் பூசப்பட்ட புளியாத பணியாரங்களாகவும் இருக்க வேண்டும்.
நீ ஒப்புக்கொடுக்கும் எந்தப் போசனப் பலியையும் உப்பினாலே சுவைப்படுத்தக் கடவாய். உன் கடவுளுடைய உடன்படிக்கையின் உப்பை உன் பலியினின்று நீக்காதே. நீ படைக்கும் எல்லாவற்றோடும் உப்பையும் படைக்கக்கடவாய்.
நீ உன் முதற் பலன்களில் இன்னும் பச்சையான கதிர்களைப் போசனப் பலியாக ஆண்டவருக்குச் செலுத்த வந்தாலோ, அவைகளை நெருப்பிலே வாட்டி வறுத்த பின் மாவாக அரைத்தே ஆண்டவருக்குச் செலுத்தக் கடவாய்.