Indian Language Bible Word Collections
Lamentations 5:2
Lamentations Chapters
Lamentations 5 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Lamentations Chapters
Lamentations 5 Verses
1
|
ஜந்தாம் புலம்பல்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைவு கூரும், எங்களை நோக்கியருளும், எங்கள் நிந்தையைப் பார்த்தருளும். |
2
|
எங்கள் உரிமைச் சொத்து அந்நியர் கையில் அகப்பட்டது; எங்கள் வீடுகள் அயலார் கைவசமாயின. |
3
|
நாங்கள் தந்தையில்லாத அனாதைகளானோம், எங்கள் தாய்மார் கைம்பெண்கள்போல் ஆயினர். |
4
|
நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம், விறகும் பணம் கொடுத்துத் தான் வாங்குகிறோம். |
5
|
நுகத்தடி எங்கள் கழுத்தில் ஏறிற்று; பகைவர் எங்களை விரட்டுகின்றனர், தளர்ச்சியுற்று விழுந்தோம்; எங்களுக்கு இளைப்பாற்றி இல்லை. |
6
|
பசி தீர உணவு கேட்டு எகிப்துக்கும் அசீரியாவுக்கும் நாங்கள் கை நீட்டினோம். |
7
|
பாவம் செய்த எங்கள் தந்தையர் மாய்ந்து போயினர், நாங்களோ அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறோம். |
8
|
அடிமைகள் எங்களை ஆள்பவர்கள் ஆயினர்,அவர்கள் கையினின்று எங்களை மீட்பார் யாருமில்லை. |
9
|
உயிராபத்திலும் பாலை நிலத்தின் வாள் முனையிலும் நாங்கள் எங்கள் உணவைத் தேடிக்கொள்ளுகிறோம். |
10
|
பஞ்சம் என்னும் புயலின் கொடுமைத் தீயால் எங்கள் மேனி கரி போலக் கறுத்துப் போயிற்று. |
11
|
சீயோனின் மங்கையரும் யூதாவின் கன்னிப்பெண்களும் அவமானத்திற்கு உள்ளாயினர். |
12
|
பகைவர்கள் எங்கள் தலைவர்களைத் தூக்கிலிட்டனர், மூப்பர்களை அவர்கள் மதிக்கவே இல்லை. |
13
|
இளைஞர்கள் எந்திரக் கல்லை இழுத்து வருந்தினர். சிறுவர்கள் விறகுச் சுமை சுமந்து தள்ளாடினர். |
14
|
மூப்பர் நீதிமன்றத்தை விட்டு அகன்று போயினர், இளைஞர்களும் இசைக் குழுவினின்று ஒழிந்தனர். |
15
|
எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது, எங்கள் இசைக் கூட்டம் இழவுக் கூட்டமாயிற்று. |
16
|
எங்கள் தலையினின்று மணிமுடி விழுந்து போயிற்று, பாவம் செய்த எங்களுக்கு ஐயோ கேடு! |
17
|
ஆதலால் எங்கள் இதயம் துயரத்திலாழ்ந்தது, எங்கள் கண்களும் இருண்டு போயின. |
18
|
ஏனெனில் சீயோன் மலை அழிவுற்றது, நரிகள் அங்கே நடமாடுகின்றன. |
19
|
நீரோ, ஆண்டவரே, என்றென்றும் நிலைத்திருப்பீர், உமது அரியணையும் தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும். |
20
|
அவ்வாறிருக்க, எங்களை என்றென்றும் நீர் மறப்பானேன்? எங்களை நெடுநாளாய்க் கைவிட்டதேன்? |
21
|
ஆண்டவரே, எங்களை உம்மிடம் திருப்பியருளும், நாங்கள் திரும்புவோம்; முன்பிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதுப்பித்தருளும்; |
22
|
அல்லது எங்களைத் தொலைவில் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? எங்கள்மேல் மிகுந்த கோபம் கொண்டீரோ? |