Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jonah Chapters

Jonah 3 Verses

1 ஆண்டவர் இரண்டாம் முறையாக யோனாசுக்குக் கூறினார்:
2 நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய் நாம் உனக்குச் சொல்லும் தூதுரையை அவர்களுக்கு அறிவி" என்றார்.
3 யோனாஸ் உடனே புறப்பட்டு ஆண்டவருடைய வார்த்தையின் படியே நினிவே நகருக்குப் போனார்; நினிவே ஒரு மாபெரும் நகரம்; அதன் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும்.
4 யோனாஸ் நகருக்குள் நுழைந்து, ஒருநாள் பயணம் செய்து, உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாட்களில் நினிவே வீழ்த்தப்படும்" என்று அறிவித்தார்.
5 நினிவே மக்கள் கடவுளை விசுவசித்தனர்; உடனே, உண்ணா நோன்பு இருக்கும்படி அறிக்கையிட்டனர்; பெரியோர் முதல் சிறியோர் ஈறாக அனைவரும் கோணியுடுத்திக் கொண்டனர்.
6 இந்தச் செய்தி நினிவே மன்னனுக்கு எட்டிற்று; அவனும் தன் அரியணையை விட்டிறங்கி, அரச ஆடையை அகற்றி விட்டு கோணியுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான்.
7 மேலும் அறிக்கையொன்று தயாரித்து நினிவே முழுவதும் விளம்பரப்படுத்தச் சொன்னான்: "அரசர், அவர் அமைச்சர்கள் ஆகியோரின் ஆணையாவது: மனிதனோ மிருகமோ ஆடு மாடுகளோ எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் பருகவோ கூடாது.
8 மனிதன், மிருகம் எல்லாருமே கோணியாடை உடுத்திக் கொண்டு, கடவுளை நோக்கி உரத்த குரலில் கூவியழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டுத் திரும்பட்டும்; தன் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டொழிக்கட்டும்.
9 அப்போது ஒரு வேளை ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, தம் கடுஞ்சினத்தை அமர்த்தக் கூடும்; நாமும் அழியாமல் தப்புவோம்."
10 அவர்கள் செய்ததைக் கடவுள் கண்டு, அவர்கள் தங்கள் தீநெறியை விட்டுத் திரும்பியதை அறிந்தார்; தாம் அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.
11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.
12 ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்; கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்;."
×

Alert

×