யோனாஸ் உடனே புறப்பட்டு ஆண்டவருடைய வார்த்தையின் படியே நினிவே நகருக்குப் போனார்; நினிவே ஒரு மாபெரும் நகரம்; அதன் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும்.
மேலும் அறிக்கையொன்று தயாரித்து நினிவே முழுவதும் விளம்பரப்படுத்தச் சொன்னான்: "அரசர், அவர் அமைச்சர்கள் ஆகியோரின் ஆணையாவது: மனிதனோ மிருகமோ ஆடு மாடுகளோ எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் பருகவோ கூடாது.
மனிதன், மிருகம் எல்லாருமே கோணியாடை உடுத்திக் கொண்டு, கடவுளை நோக்கி உரத்த குரலில் கூவியழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டுத் திரும்பட்டும்; தன் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டொழிக்கட்டும்.
அவர்கள் செய்ததைக் கடவுள் கண்டு, அவர்கள் தங்கள் தீநெறியை விட்டுத் திரும்பியதை அறிந்தார்; தாம் அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.
அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.