இயேசு அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார். அவளோ அவரைத் தோட்டக்காரன் என்றெண்ணி அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் ? சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்" என்றாள்.
இயேசு அவளை நோக்கிக் கூறியதாவது: "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில், நான் மேலெழும்பி என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. என் சகோதரர்களிடம்போய், ' என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகியவரிடம் நான் மேலே எழும்பிச் செல்கிறேன் ' என்று அவர்களுக்குச் சொல்."
வாரத்தின் முதல் நாளாகிய அன்று மாலை, சீடர்கள் தாங்கள் கூடியிருந்த இடத்திலே யூதருக்கு அஞ்சிக் கதவுகளை மூடிவைத்திருக்கையில், இயேசு வந்து அவர்களிடையே நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.
மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்" என்றார்.
எட்டு நாளுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் வீட்டில் இருந்தார்கள். தோமையாரும் அவர்களோடிருந்தார். கதவுகள் மூடியிருக்க, இயேசு வந்து அவர்களிடைய நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.