Indian Language Bible Word Collections
Job 8:4
Job Chapters
Job 8 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 8 Verses
1
|
அதற்குச் சுகீத்தனான பால்தாத் சொன்ன மறுமொழி பின்வருமாறு: |
2
|
எவ்வளவு நேரம் நீர் இவ்வாறு பேசுவீர்? உமது வாயிலிருந்து வரும் சொற்கள் கடும் புயல் போலிருக்கின்றனவே! |
3
|
கடவுள் நீதியைப் புரட்டுகிறாரோ? எல்லாம் வல்லவர் நேர்மையானதைப் புரட்டுவாரோ? |
4
|
உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவஞ் செய்திருப்பின், அவர்கள் பாவங்களுக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்; |
5
|
ஆனால் நீர் கடவுளைத் தேடி, எல்லாம் வல்லவரைப் பார்த்து மன்றாடினால், |
6
|
நீர் தூய்மையும் நேர்மையும் உள்ளவராய் இருந்தால், உமக்காக அவர் விழித்தெழுந்து வந்து நீதிமானுக்குரிய வீடு வாசல்களை உமக்குத் திருப்பித் தருவார். |
7
|
உமது தொடக்க நிலை மிக அற்பமானதாயினும் உம் பின்னைய நாட்கள் மிகப் பெருமை உடையனவாயிருக்கும். |
8
|
முந்தின தலைமுறையினரை நீர் விசாரித்துப் பாரும், அவர்கள் தந்தையர் கண்டறிந்ததைச் சிந்தியும். |
9
|
ஏனெனில் நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், நமக்கு ஒன்றுமே தெரியாது, உலகில் நாம் வாழும் நாட்கள் வெறும் நிழலே. |
10
|
ஆனால் அவர்கள் உமக்குக் கற்பிப்பார்கள், சொல்லுவார்கள், உள்ளத்திலிருந்து அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இவையே: |
11
|
ஈரமின்றி நாணல் வளர இயலுமோ? நீரின்றிக் கோரை ஓங்கி வளருமோ? |
12
|
அறுக்கப்படாமல் இன்னும் பூவோடு இருக்கும் போதே மற்றப் புற்களினும் விரைவில் அது வாடிப் போகிறது. |
13
|
கடவுளை மறக்கிற அனைவரின் நெறிகளும் அத்தகையனவே. கடவுள் பற்றில்லாதவனின் நம்பிக்கை அழிந்து போகும். |
14
|
அவனுடைய நம்பிக்கை வெறும் நூல் போன்றது, அவனுடைய உறுதி சிலந்திப் பூச்சியின் நூலுக்கு நிகர். |
15
|
தன் வீட்டின் மேல் அவன் சாய்ந்து கொள்ளுகிறான், அது உறுதியாய் நிற்பதில்லை; அதைப் பற்றிக் கொள்ளுகிறான், அதுவோ நிலைக்கிறதில்லை. |
16
|
கதிரவன் எரிக்கும் போதும் அவன் தளிர்க்கிறான், அவன் தளிர்கள் தோட்டமெங்கும் பரவுகின்றன. |
17
|
அவன் வேர்கள் கற்குவியலில் பின்னலிட்டு இறங்குகின்றன, பாறைகளின் நடுவில் அவன் வாழ்கிறான். |
18
|
அவனுக்குரிய இடத்தினின்று அவன் அழிக்கப்பட்டால், அவ்விடம், 'உன்னை நான் பார்த்ததே இல்லை' எனச்சொல்லி மறுக்கும். |
19
|
அவனோ வழியில் அழுகிக் கிடக்கிறான், நிலத்திலிருந்து மற்றவர்கள் முளைக்கிறார்கள். |
20
|
ஆனால் மாசற்றவனைக் கடவுள் தள்ளிவிடுகிறதில்லை, கொடியவர்களுக்குக் கைகொடுத்து உதவுகிறதில்லை. |
21
|
மீண்டும் உம் வாயில் சிரிப்பும், உம் உதடுகளில் மகிழ்ச்சியொலியும் நிறைந்திடச் செய்வார். |
22
|
உம்மைப் பகைப்பவர்கள் அப்போது வெட்கத்தால் மூடப்படுவர். கொடியவர்களின் கூடாரம் இல்லாமல் அழியும்." |