Indian Language Bible Word Collections
Job 41:14
Job Chapters
Job 41 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 41 Verses
1
|
(4:20) மீன் தூண்டிலால் லெவீயாத்தானை உன்னால் பிடிக்கக்கூடுமோ? அதன் நாக்கைக் கயிற்றால் கட்ட உன்னால் இயலுமோ? |
2
|
(4:21) அதற்கு மூக்கணாங்கயிறு போட உன்னால் முடியுமோ? அல்லது குறட்டினால் அதன் தாடையைத் துளைக்கலாகுமோ? |
3
|
(4:22) உன்னை நோக்கி அது கெஞ்சி மன்றாடுமோ? உன்னிடம் இன் சொற்களைப் பேசுமோ? |
4
|
(4:23) எந்நாளும் அதை உன் ஊழியனாய் நீ வைத்துக் கொள்ளும்படி உன்னோடு அது ஒப்பந்தம் செய்து கொள்ளுமோ? |
5
|
(4:24) பறவையோடு விளையாடுவது போல் அதனோடும் விளையாடுவாயோ? உன் பெண் மக்களுக்கு அதை வாரால் கட்டி, விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பாயோ? |
6
|
(4:25) வணிகர்கள் அதை விலைக்குக் கேட்பார்களோ? வியாபாரிகளுக்குள் அதைக் கூறுபோட்டுப் பிரித்துக் கொள்வார்களோ? |
7
|
(4:26) எறிபடைகளால் அதன் தோலைக் குத்தி நிரப்புவாயோ? மீன் வல்லயத்தால் அதன் தலையைக் குத்துவாயோ? |
8
|
(4:27) அதன் மேல் உன் கைகளை வைத்துப்பார்; எழும்பும் மல்லாட்டத்தை ஒருபோதும் மறவாய்; மறுபடி அவ்வாறு செய்ய நீ நினைக்க மாட்டாய்! |
9
|
(4:28) இதோ, அதைப் பிடிக்கலாமென நம்புகிறவன் ஏமாந்து போகிறான், அதைப் பார்த்ததுமே அவன் அஞ்சித் தளர்வான். |
10
|
(1) அதை எழுப்பினால் அது சீறியெழும், அதற்கு முன் எதிர்த்து நிற்கக் கூடியவன் எவனுமில்லை. |
11
|
(2) அதைத் தாக்கிய எவனாவது தப்பியதுண்டோ? வானத்தின் கீழ் இருப்பவர்களுள் எவனுமில்லை. |
12
|
(3) லெவீயாத்தானின் உறுப்புகளைப் பற்றிச் சில சொல்வோம், அதன் நிகரற்ற ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் விவரிப்போம்: |
13
|
(4) அதன் மேல் தோலை உரிக்கக் கூடியவன் யார்? இரு மடங்கான அதன் மார்புக் கவசத்தை ஊடுருவினவன் யார்? |
14
|
(5) அதன் முகத்தின் கதவுகளைத் திறக்கக் கூடியவன் எவன்? அதன் பற்களைச் சுற்றியும் திகில் தான் இருக்கிறது. |
15
|
(6) அதன் முதுகு மூடி முத்திரையிட்டாற் போல், கேடயங்களின் வரிசைகளால் அமைந்துள்ளது. |
16
|
(7) காற்று கூட அவற்றினிடையே நுழையாதபடி ஒன்றோடொன்று நெருக்கமாய் பொருந்தியுள்ளன. |
17
|
(8) அவை ஒன்றோடொன்று கெட்டியாய் ஒட்டியுள்ளன, ஒன்றை விட்டொன்று பிரிக்கப்பட முடியாது. |
18
|
(9) லெவீயாத்தானின் தும்மல்கள் தீயைக் கக்கும், அதன் கண்கள் வைகறையின் கண்ணிமைகள் போலுள்ளன. |
19
|
(10) அதன் வாயினின்று தீக்கொள்ளிகள் வெளிப்படுகின்றன, தீப்பொறிகள் வெளியில் தாவுகின்றன. |
20
|
(11) கொதிக்கும் பானையினின்றும், எரியும் நாணல்களினின்றும் புகையெழுவது போல் அதன் மூக்கிலிருந்து புகை வெளிப்படுகிறது. |
21
|
(12) அதன் மூச்சு கரிக்கட்டைகளை எரியச் செய்யும், அவன் வாயிலிருந்து தீக்கொழுந்து வெளிப்படும். |
22
|
(13) வலிமை அதன் கழுத்தில் குடிகொண்டுள்ளது, அச்சம் அதன் முன்னிலையில் கூத்தாடுகிறது. |
23
|
(14) அதன் சதை மடிப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துள்ளன, அசைக்க முடியாமல் கெட்டியாய் ஒட்டியுள்ளன. |
24
|
(15) அதன் இதயம் கல்லை போல் உறுதியானது, எந்திரக் கல்லை போல் கடினமானது. |
25
|
(16) அது எழுந்திருக்கும் போது உம்பர்களும் அஞ்சுகிறார்கள், நடுநடுங்கி நிலை கலங்குகிறார்கள். |
26
|
(17) வாளால் வெட்டினாலும், அதற்குத் காயமேற்படாது; ஈட்டியோ அம்போ எறிவேலோ அதை ஒன்றும் செய்ய முடியாது. |
27
|
(18) இரும்பை வைக்கோலாகவும் வெண்கலத்தை உளுத்த மரமாகவும் அது கருதிக் கொள்கிறது. |
28
|
(19) அம்பினால் அதை விரட்ட முடியாது, அதற்குக் கவண் கற்களும் துரும்புக்குச் சமம். |
29
|
(20) பெரிய தடிகள் அதற்குச் சிறிய நாணற் குச்சிகள் போலாம், எறிவேல்கள் பாய்வதைக் கண்டு அது நகைக்கிறது. |
30
|
(21) அதன் வயிற்றின் அடிப்பாகம் கூரிய ஓடுகள் போல் உள்ளது, புணையடிக்கும் உருளை போல் அது சேற்றில் புரளுகிறது. |
31
|
(22) கொதிபானை போல் ஆழ்கடலைக் கொதிக்கச் செய்கிறது, மாக்கடலைத் தைலச் சட்டி போல் ஆக்குகிறது. |
32
|
(23) அது நீந்திச் சென்ற பாதை நீரில் மினுமினுக்கும், ஆழ்கடல் நரைத்ததென கருதத் தோன்றும். |
33
|
(24) அச்சமென்பதறியாத படைப்பு ஒன்று, அதைப் போல இவ்வுலகில் வேறெதுவுமில்லை. |
34
|
(25) ஆணவமுள்ளோரை அது கண்ணில் உற்று நோக்கும், இறுமாப்பின் மக்களுக்கெல்லாம் அதுவே அரசன்." |