Indian Language Bible Word Collections
Job 40:24
Job Chapters
Job 40 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 40 Verses
1
|
(39:31) ஆண்டவர் தொடர்ந்து யோபுவுக்கு மறுமொழி கூறினார்: |
2
|
(39:31) குற்றம் காண்பவன் எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானோ? கடவுளோடு வாதாடுபவன் மறுமொழி கூறட்டும்!" |
3
|
(39:31) அப்பொழுது யோபு ஆண்டவருக்கு மறுமொழியாக, |
4
|
(39:31) நாயேன் நான்! உமக்கு என்ன பதிலுரைப்பேன்? கையால் என் வாயைப் பொத்திக்கொள்கிறேன்! |
5
|
(39:31) ஒரு முறை நான் பேசிவிட்டேன், இனி வாய் திறவேன்; இன்னொரு முறையும் பேசினேன், இனிப்பேசவே மாட்டேன்!" என்றார். |
6
|
(1) அப்போது ஆண்டவர் சுழற்காற்றின் நடுவிலிருந்து யோபுவுக்கு மறுமொழி கூறினார். |
7
|
(2) அவர் சொன்னது: "வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக்கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடை கூறு. |
8
|
(3) நாம் செய்தது சரியன்று என நீ காட்டுவாயோ? நீ குற்றமற்றவன் என்றெண்பிக்க நம்மைக் குற்றவாளியாக்குவாயோ? |
9
|
(4) கடவுளுக்கு இருப்பது போல் உனக்குக் கைவன்மையுண்டோ? அவரைப் போல் நீயும் இடி முழக்கமாய்ப் பேசக்கூடுமோ? |
10
|
(5) மகிமையாலும் மேன்மையாலும் உன்னை அணி செய்துகொள், மகிமையையும் ஒளியையும் உடுத்திக்கொள். |
11
|
(6) உன்னுடைய கடுஞ்சினத்தை எங்கணும் கொட்டி, செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் தாழ்த்து; |
12
|
(7) செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் வீழ்த்து; பொல்லாதவர்களை அவர்கள் இடத்திலேயே மிதித்துப்போடு. |
13
|
(8) அவர்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துப் புழுதியில் புதை; அவர்கள் முகங்களைக் கட்டி ஆழ்குழியில் தள்ளு. |
14
|
(9) அப்பொழுது தான் உன் வலக்கை உனக்கு வெற்றி தரக்கூடியது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். |
15
|
(10) நீர்யானையைக் கவனித்துப் பார்; உன்னை உண்டாக்கினது போலவே அதையும் உன்டாக்கினோம்; எருதைப் போல் அது புல் தின்கிறது. |
16
|
(11) இதோ, ஆற்றல் அதனுடைய இடுப்பிலும், அதன் வலிமை வயிற்றுத் தசை நார்களிலும் உள்ளன. |
17
|
(12) தன் வாலை கேதுரு மரத்தை போல் விறைக்கும், அதன் தொடை நரம்புகள் கயிறு போல் பின்னியிருக்கும். |
18
|
(13) அதன் எலும்புகள் வெண்கலக் குழாய்கள் போலும், அதன் உறுப்புகள் இருப்புக் கம்பிகள் போலும் உள்ளன. |
19
|
(14) கடவுளின் கைவேலைகளில் தலை சிறந்தது அதுவே; ஆனால் அதை உண்டாக்கியவர் வாளால் அதை அச்சுறுத்தினார். |
20
|
(15) மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கின்றன, கொடிய மிருகங்கள் யாவும் அங்கே விளையாடுகின்றன. |
21
|
(16) தாமரைச் செடிகளின் கீழும் நாணல்களின் மறைவிலும் சதுப்பு நிலத்திலும் அது படுத்துக் கிடக்கும். |
22
|
(17) தாமரை இலைகள் அதற்கு நிழல் தருகின்றன, நீரோடையின் ஓரத்திலுள்ள அலரிகள் அதைச் சூழ்ந்திருக்கும். |
23
|
(18) இதோ, வெள்ளம் பெருக்கெடுத்தாலும் அது அஞ்சாமலிருக்கிறது; யோர்தான் அதன் முகத்தில் மோதினாலும் அது கவலைப்படுகிறதில்லை. |
24
|
(19) தூண்டிலால் யாரேனும் அதைப்பிடிக்கக் கூடுமா? அல்லது மண்டா பாய்ச்சி அதன் மூக்கைத் துளைக்க முடியுமா? |