Indian Language Bible Word Collections
Job 16:22
Job Chapters
Job 16 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 16 Verses
1
அதற்கு யோபு கூறிய மறுமொழி வருமாறு:
2
இப்படிப்பட்டவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், நீங்கள் யாவரும் துயர் தரும் தேற்றரவாளர்களே.
3
காற்றைப் போன்ற சொற்களுக்கு முடிவே இல்லையா? மறுமொழி கூறும்படி உம்மைத் தூண்டுவது யாது?
4
என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால், உங்களைப் போலவே நானும் பேசக்கூடும். (5) உங்களுக்கெதிராய்ச் சொற்களை அடுக்கிப் பேசி, உங்களைப் பார்த்து என் தலையை ஆட்டிக்கொண்டே,
5
(6) வாய்ச் சொல்லால் உங்களைத் திடப்படுத்தவும், உதடுகளால் ஆறுதல் மொழிகள் கூறவும் என்னாலும் கூடும்.
6
(7) நான் பேசினால், என் துயர் தணிகிறதில்லையே, பேசாமல் பொறுத்துக்கொண்டால், என் வேதனை சிறிதேனும் நீங்குமோ?
7
(8) இப்பொழுதோ நான் துன்பக் கடலில் அமிழ்ந்திருக்கிறேன், என் உறுப்புகளெல்லாம் இளைத்துப் போயின.
8
(9) என் முகத்தில் விழுந்த திரைகளே எனக்கெதிரான சாட்சி, எனது உடல் மெலிவு எனக்கெதிராய் நின்று சான்று பகர்கிறது.
9
(10) அவர் என்னைப் பகைத்துத் தம் ஆத்திரத்தில் என்னைப் பீறினார், என்னைப் பார்த்துப் பற்களைக் கடித்தார், என் எதிரி என்னை உறுத்துப் பார்க்கிறான்.
10
(11) மனிதர் எனக்கெதிராய்த் தங்கள் வாயைப் பிளந்தார்கள், நிந்தையாய் என்னைக் கன்னத்தில் அறைந்தனர், எனக்கெதிராய் அவர்கள் ஒன்றுகூடினர்.
11
(12) பழிகாரர்களிடம் கடவுள் என்னைக் கையளிக்கிறார், கொடியவர்கள் கையில் என்னைச் சிக்கச் செய்கிறார்.
12
(13) இன்பமாய் வாழ்ந்தேன், அவரோ என்னை நொறுக்கிவிட்டார்; பிடரியைப் பிடித்து என்னை மோதித் தூள் தூளாக்கினார்; குறிபார்த்தடிக்கும் இலக்காக என்னை ஏற்படுத்தினார்.
13
(14) அவருடைய வில் வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றனர். சிறிதும் இரக்கம் காட்டாமல் என் ஈரலைப் பிளந்தார், என் பிச்சைத் தரையில் ஊற்றினார்.
14
(15) அடிமேல் அடி அடித்து என்னைப் புடைக்கிறார், போர் வீரனைப் போல் என் மேல் பாய்ந்து விழுகிறார்.
15
(16) கோணித் துணியை என் தோலோடு தைத்துக் கொண்டேன், என் தலையைப் புழுதியில் தாழ்த்தி விட்டேன்.
16
(17) அழுது அழுது என்முகம் சிவந்துவிட்டது, என் கண்ணிமைகளைக் காரிருள் கவ்விக்கொண்டது.
17
(18) என் கைகளில் வன்முறை யேதும் இல்லாதிருந்தும், என் வேண்டுதல் தூயதாய் இருந்தும் இவை நேர்ந்தனவே.
18
(19) மண்ணிலமே, என் இரத்தத்தை மூடி மறைக்காதே, என் அழுகை ஓய்ந்திருக்க இடங் கொடாதே.
19
(20) இப்போதும் இதோ என் சாட்சி வானகத்தில் இருக்கிறார், என் சார்பாகப் பேசுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
20
(21) என்னுடைய நண்பர்கள் என்னைப் பழிக்கின்றனர், என் கண்கள் கடவுள்முன் கண்ணீர் வடிக்கின்றன.
21
(22) ஒருவன் தன் அயலானோடு வழக்காடுவது போலவே கடவுளோடும் வழக்காடக் கூடுமானால்..!
22
(23) சில ஆண்டுகளே உள்ளன; அவை கடந்த பின் திரும்பிவர முடியாத வழிக்குப் போய்விடுவேன்.