Indian Language Bible Word Collections
Job 10:7
Job Chapters
Job 10 Verses
Books
Old Testament
New Testament
Bible Versions
English
Tamil
Hebrew
Greek
Malayalam
Hindi
Telugu
Kannada
Gujarati
Punjabi
Urdu
Bengali
Oriya
Marathi
Assamese
Books
Old Testament
New Testament
Job Chapters
Job 10 Verses
1
வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்; என் முறையீட்டைத் தாராளமாய்ச் சொல்வேன், என் மனக் கசப்பை வெளிப்படுத்துவேன்.
2
கடவுளை நோக்கி நான் சொல்வது இதுவே: 'என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பிடாதீர், எனக்கெதிராய் நீர் வழக்காடுவது ஏனென்று எனக்குத் தெரியப்படுத்தும்.
3
உம் கைகளால் உருவாக்கிய என்னை ஒடுக்கி அவமதிப்பது உமக்குச் சரி எனப்படுகிறதா? கொடியவரின் திட்டங்களுக்கு நீர் உடந்தையாகலாமா?
4
ஊனக் கண்கள் தான் உமக்குண்டா? மனிதர்கள் பார்க்கிறபடி நீரும் பார்க்கிறீரா?
5
உம்முடைய நாட்கள் மனிதனின் நாட்கள் போன்றவையா? உம்முடைய ஆண்டுகள் மனிதனின் ஆண்டுகள் போன்றவையா?
6
பின்னர் ஏன் என் அக்கிரமத்தை ஆராய்ந்து என் பாவங்களைக் கிண்டிக் கிளறிப் பார்க்கிறீர்?
7
நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியாததன்று; உம் கையினின்று தப்பிக்க வல்லவன் எவனுமில்லை.
8
உம் கைகளே என்னை உருவாக்கிப் படைத்தன, ஆனால் நீரே இப்பொழுது திரும்பி என்னை அழிக்கிறீரே!
9
களிமண்ணால் நீர் என்னை வனைந்ததை நினைவுகூரும்; என்னை மீண்டும் தூசியாக மாற்றிவிடுவீரோ?
10
பால் போல என்னை நீர் வார்த்து, என்னைத் தயிர்க்கட்டி போல் உறையச் செய்தீரன்றோ?
11
தோலாலும் சதையாலும் என்னை மூடினீர், எலும்புகளாலும் தசை நார்களாலும் என்னைப் பின்னினீர்.
12
உயிரையும் உம் நிலையான அன்பையும் எனக்கு அருளினீர், உமது அக்கறை என் ஆவியைக் காத்து வந்தது.
13
உம் உள்ளத்தில் மறைத்து வைத்தாலும், உம் எண்ணம் என்ன என்பதை நான் அறிவேன்.
14
நான் பாவஞ் செய்தால் அதைக் கவனித்துக்கொள்ளுகிறீர், நான் குற்றம் செய்தால் என்னைக் குற்றம் சாட்டாமல் விடமாட்டீர்.
15
நான் தீயவனாயிருந்தால் எனக்கு ஐயோ கேடு! நான் நேர்மையுள்ளவனே என்றாலும், தலை தூக்க இயலாதே! ஏனெனில் அவமானத்தால் நான் நிறைந்திருக்கிறேன், என் வேதனைகளையே கண்ணோக்குகிறேன்.
16
நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கம் போல் என்மேல் பாய்கிறீர், எனக்கெதிராய் மீண்டும் விந்தைகள் புரிகிறீர்.
17
எனக்கெதிரான உம் சாட்சிகளைப் புதுப்பிக்கிறீர், என்மேல் உமது எரிச்சலை மிகுதிப்படுத்துகிறீர், எனக்கெதிராய்ப் புதிய பகைவரைக் கொண்டு வருகிறீர்.
18
தாய் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளிவரச் செய்தீர்? யாரும் பாரா முன்பே நான் செத்திருக்கலாகாதா!
19
கருப்பையிலிருந்து நேரே சவக்குழிக்கு நான் போயிருந்தால் தாவிளை. அப்போது நான் இல்லாதவன் போலவே ஆயிருக்கும்!
20
எஞ்சியுள்ள என் வாழ்நாட்கள் விரைவில் முடியுமன்றோ? எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்படி என்னைத் தனிமையில் விட்டுவிடும்.
21
அதன்பின் திரும்பி வர இயலாத நாட்டுக்கு நான் போய்விடுவேன், அங்கு இருளும் அடர்ந்த காரிருளும் நிறைந்துள்ளது;
22
ஒழுங்கற்ற பேயிருட்டுச் சூழ்ந்துள்ளது; ஒளியே இருளாய்க் கவ்வியிருக்கிறது."