நீங்கள் கூடியுள்ள இடத்தில், பொன் மோதிரமணிந்து பகட்டான உடை உடுத்திய ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அழுக்குக் கந்தையோடு ஏழை ஒருவனும் அங்கே வருகிறான்.
பகட்டாக உடுத்தியவனைப் பார்த்து, "ஐயா, தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று கவனித்துக் கொள்கிறீர்கள். ஏழையிடமோ, "அடே, அங்கே நில்" என்கிறீர்கள், அல்லது "தரையில் உட்கார்" என்கிறீர்கள்.
என் அன்புச் சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகினர் கண்ணுக்கு ஏழையாய் உள்ளவர்களைக் கடவுள் விசுவாசத்தில் செல்வமுடையவர்களாகவும், தம்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு வாக்களித்த அரசில் உரிமை தரவும் தேர்ந்துகொள்ளவில்லையா?
"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று மறைநூல் கூறும் இறையரசின் திருச்சட்டத்தை நீங்கள் கடைப்பிடிப்பீர்களாகில் நன்று.
ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம். திருச்சட்டத்தை மீறுகிறவர்களென அச்சட்டமே உங்களைக் கண்டனம் செய்கிறது.
ஏனெனில், "விபசாரம் செய்யாதே" என்று கூறியவர், "கொலை செய்யாதே" என்றும் கூறியுள்ளார். நீ விபசாரம் செய்யாவிடினும் கொலை செய்தால் சட்டத்தை மீறியவன் ஆகிவிட்டாய்.
ஆனால், "ஒருவனிடம் விசுவாசம் உள்ளது, இன்னொருவனிடம் செயல் உள்ளது; அதனால் என்ன?" என்று யாராவது சொல்லக்கூடும். செயல்கள் இல்லாத அந்த விசுவாசத்தை எனக்குக் காட்டு. நான் செயல்களைக் கொண்டு என் விசுவாசத்தை உனக்குக் காட்டுகிறேன்.
இவ்வாறு "ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவர் என மதித்தார்" என்ற மறைநூல் வாக்கு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பன் எனவும் அழைக்கப் பெற்றார்.