கடவுள் நோவாவையும் அவருடன் பெட்டகத்தில் இருந்த எல்லாக் காட்டு மிருகங்களையும் வீட்டு மிருகங்களையும் நினைவு கூர்ந்து, காற்று வீசச் செய்யவே, வெள்ளம் குறைந்தது.
பூமியின் மீது எங்கும் வெள்ளம் பரந்து கிடந்தமையால், கால் வைத்து இளைப்பாறவும் இடம் காணாமல் அது திரும்பவும் அவரை நாடிப் பெட்டகத்திற்கு வந்தது. அவர் கை நீட்டி அதைப் பிடித்துப் பெட்டகத்தினுள் சேர்த்தார்.
அது மாலை நேரத்தில் பசும் இலைகளையுடைய ஒலிவ மரத்தின் கிளையொன்றை அலகில் கவ்விக் கொண்டு தன் அண்டையில் வந்ததனால், பூமியின் மீது வெள்ளம் அற்றுப் போயிற்றென்று நோவா தெரிந்து கொண்டார்.
இவ்வாறு அறுநூற்றோராம் ஆண்டின் முதல் மாதம், முதல் நாளன்று பூமியின் மீது வெள்ளம் வற்றிப் போயிற்று. அப்பொழுது நோவா பெட்டகத்தின் மேல் தட்டைப் பிரித்து (வெளியே) பார்த்துப் பூமியின் மேல் தண்ணீர் இல்லையென்று கண்டார்.
உன்னோடிருக்கிற பலவகை உயிரினங்களாகிய எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும், பூமியின் மேல் ஊர்வன யாவையும் உன்னோடு கூட வெளியே வரவிடு. நீங்கள் பூமியில் வாழ்ந்து அதன் மேல் பலுகிப் பெருகுவீர்களாக என்றார்.
ஆண்டவர் அவற்றை நறுமணமுள்ள பரிமளமாக ஏற்றுக்கொண்டு: நாம் இனி மனிதன் பொருட்டுப் பூமியை ஒருபோதும் சபிக்க மாட்டோம். ஏனென்றால், மனிதனுடைய இதய சிந்தனைகள் இளமை முதல் தீமையின் மீதே நாட்டம் கொண்டுள்ளன. ஆதலால், இப்பொழுது செய்தது போல் இனி நாம் உயிரினங்கள் யாவையும் மறுமுறை அழிக்க மாட்டோம்.