English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 48 Verses

1 இதன் பின்னர், அவர் தம் தந்தையின் உடல் நலம் சரி இல்லை என்று சூசைக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், தம் இரு புதல்வர்களாகிய மனாசேயையும் எபிராயிமையும் அழைத்துக் கொண்டு பயணமானார்.
2 இதோ உம் புதல்வர் சூசை உம்மிடம் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் சொல்லவே, அவன் திடம் கொண்டு எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தான்.
3 பின், தன் கிட்ட வந்த (சூசையை) நோக்கி: எல்லாம் வல்ல கடவுள் கானான் நாட்டிலுள்ள லூசாவிலே எனக்குக் காட்சியளித்து என்னை ஆசீர்வதித்து:
4 நாம் உன்னைப் பலுகிப் பெருகச் செய்வோம். உன்னைக் கூட்டமான பெருங்குடியாகச் செய்வோம். இந்நாட்டை உனக்கும், உனக்குப் பின் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகத் தருவோம் என்றருளினார்.
5 ஆகையால், நான் எகிப்துக்கு வந்து உன்னிடம் சேருவதற்கு முன்னே உனக்கு இந்நாட்டிலே பிறந்த இரண்டு மக்களும் எனக்குப் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன் சிமையோன் போன்று எபிராயிமும் மனாசேயும் என்னுடையவர்கள் என்று எண்ணப்படுவார்கள்.
6 இவர்களுக்குப் பின் நீ பெறும் மற்ற புதல்வர்களோ, உன்னுடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தத்தம் சகோதரருடைய பெயரால் அழைக்கப்பட்டு, அவரவர்களுக்கு உரிய உரிமையில் பங்கு பெறுவார்கள்.
7 ஏனென்றால், நான் மெசொப்பொத்தாமியாவைவிட்டு வருகையில், வழியிலே எனது இராக்கேல் கானான் நாட்டில் இறந்தாள். அப்பொழுது வசந்த காலம். நான் எபிறாத்தாவுக்கு அண்மையில் இருந்தேன். பெத்லகேம் என்று அழைக்கப்படுகிற எபிறாத்தா ஊருக்குப் போகும் பாதை ஓரத்திலே அவளை அடக்கம் செய்தேன் என்றான்.
8 பின் அவன் சூசையின் புதல்வர்களைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டதற்கு, சூசை:
9 இவர்கள் இந்நாட்டிலே கடவுள் எனக்குத் தந்தருளின புதல்வர்கள் என்று சொல்ல, அவன்: அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்றான்.
10 உள்ளபடி, முதிர் வயதினால் இஸ்ராயேலின் கண்கள் மங்கலாய் இருந்தன. எனவே, அவன் நன்கு பார்க்கக் கூடாதவனாய் இருந்தான். அவர்களைத் தன் அருகிலே சேர்ப்பித்த போது, அவன் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டான்.
11 பின் தன் மகனை நோக்கி: நான் உன்னையும் காணும் பேறு பெற்றேன்; உன் புதல்வர்களையும் காணும்படி கடவுள் அருள் செய்துள்ளார் என்றான்.
12 சூசை யாக்கோபின் மடியிலிருந்த தன் பிள்ளைகளைப் பின்னிடச் செய்து, தாமே தரைமட்டும் குனிந்து வணங்கினார்.
13 பின், சூசை எபிராயிமைத் தம் வலப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் இடக் கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் வலக்கைக்கு நேராகவும் நிறுத்தினார்.
14 யாக்கோபோ, தன் இரு கைகளையும் குறுக்கீடாக அமைத்துக் கொண்டு, வலக்கையை இளையவன் எபிராயிம் தலை மேலும், இடக் கையை மூத்தவன் மனாசே தலை மேலும் வேண்டுமென்றே வைத்து, சூசையின் புதல்வர்களை ஆசீர்வதித்தான்.
15 எப்படியென்றால்: என் தந்தையரான ஆபிரகாம் ஈசாக் எவருடைய திருமுன் நடந்தொழுகி வந்தனரோ, இளமை முதல் இந்நாள் வரை என்னைப் பேணிக் காத்து வருகின்ற அந்தக் கடவுளும், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட வானவனும்,
16 இச்சிறுவர்களை ஆசீர்வதிப்பாராக. மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம் ஈசாக்கின் பெயர்களும் இவர்களுக்கு இடப்படுவனவாக. பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகக் கடவார்கள் என்றான்.
17 தந்தை தன் வலக் கையை எபிராயிம் தலை மேல் வைத்திருந்தது கண்டு, சூசை மனவருத்தம் கொண்டு, எபிராயிம் தலை மேலிருந்த தன் தந்தையின் கையை, மனாசேயின் தலைமேல் வைக்கும்படி, எடுக்க முயன்று:
18 தந்தையே, இது தகுதியல்லவே. இவன் தான் மூத்தவன். இவன் தலையின் மேல் உமது வலக் கையை வைக்க வேண்டும் என்றார்.
19 அதற்கு அவன் இசையாமல்: தெரியும், மகனே, எனக்குத் தெரியும். இவன் பெருங்குடியாகப் பலுகுவான் என்பது மெய்யே. ஆனால், இவன் தம்பி இவனிலும் பெரியவனாவான். அவன் சந்ததியார் திரளான மக்களாகப் பெருகுவார்கள் என்று சொல்லி,
20 அவர்களை அப்பொழுதே ஆசிர்வதித்து: உன்னில் இஸ்ராயேல் ஆசீர்வதிக்கப்படுவதுமன்றி, கடவுள் எபிராயிமுக்கும் மனாசேக்கும் செய்ததுபோல் உனக்கும் செய்யக் கடவராக என்று சொல்லவும்படும் என்றான். அவ்விதமாய் எபிராயிமை மனாசேக்கு முன்னிடத்தில் வைத்தான்.
21 பின், அவன் தன் மகன் சூசையை நோக்கி: இதோ நான் சாகப் போகிறேன். ஆண்டவர் உங்களோடு இருப்பார். அவர் உங்கள் மூதாதையருடைய நாட்டிற்கு உங்களைத் திரும்பவும் போகச் செய்வார்.
22 உன் சகோதரருக்குக் கொடுத்ததைக் காட்டிலும் உனக்கு நான் ஒரு பாகம் அதிகமாய்க் கொடுக்கிறேன். அதை நான் என் வாளினாலும் என் வில்லினாலும் அமோறையர் கையிலிருந்து சம்பாதித்தேன் என்றான்.
×

Alert

×