பின், இஸ்ராயேல் தனக்குள்ள யாவற்றையும் சேர்த்துக் கொண்டு பயணமாகி, பிரமாணிக்கக் கிணறு என்னும் இடம் வந்து சேர்ந்தான். அவ்விடத்தில் தன் தந்தையாகிய ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தான்.
நாம் உன்னோடு அவ்விடத்திற்கு வருவோம். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வரும் போது உன்னை கூட்டி வருவோம். சூசை தன் கையாலே உன் கண்களை மூடுவான் என்றார். யாக்கோபு பிரமாணிக்கக் கிணறு என்னும் இடத்திலிருந்து எழுந்தான்.
அப்பொழுது அவன் புதல்வர்கள், அவனையும் அவன் பிள்ளைகளையும் மனைவிகளையும் முதிர்ந்த வயதினனாகிய அவனுக்குப் பாரவோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டான்.
கானான் நாட்டில் அவன் சம்பாதித்திருந்த சொத்துக்கள் யாவற்றையும் கூடச் சேர்த்துக் கொண்டான். யாக்கோபு அவற்றோடும் தன் இனத்தார் எல்லோரோடும் எகிப்துக்குப் போனான்.
இவர்களை லீயாள் என்பவள் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவிலே பெற்றாள். தீனாள் அவளது புதல்வி, அவளுக்குப் பிறந்த புதல்வர் புதல்வியர் எல்லாரும் முப்பத்து மூன்று பேர்.
சூசைக்கு எகிப்து நாட்டிலே புதல்வர் பிறந்தனர். எலியோப்பொலிசின் குருவாகிய புத்திபாரே என்பவரின் புதல்வியான ஆஸ்னேட், அவர்களை அவருக்குப் பெற்றனள். அவர்கள்: மனாசே, எபிராயிம் என்பவர்களாம்.
இவன் அவ்விடம் சேர்ந்ததும், சூசை தம் தேரைத் தயார் செய்து, அதன் மேல் ஏறித் தந்தைக்கு எதிர் கொண்டு போய், அவனைக் கண்டவுடன் அவன் கழுத்தின் மீது விழுந்து அணைத்து அணைத்து அழுதார்.
அப்பொழுது தந்தை சூசையை நோக்கி: (அப்பா மகனே!) உன் முகத்தை நான் கண்டு விட்டேன்! எனக்குப் பின் உன்னை உயிருடன் இவ்வுலகில் விட்டுவைப்பேன்! ஆதலால், எனக்கு இப்பொழுதே சாவு வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றான்.
அவரோ, தம் சகோதரரையும், தம் தந்தையின் குடும்பத்தாரையும் பார்த்து: நான் பாரவோனிடம் போய்: கானான் நாட்டிலிருந்து என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.
அவர்களோ ஆடு மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும், தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குச் செய்தி சொல்லுவேன்.
சிறு வயது முதல் இந்நாள் வரை உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோர்களைப் போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் யேசேன் நாட்டில் குடியிருக்கும்படியாகவே அவ்விதம் சொல்லுங்கள். ஏனென்றால், ஆடு மேய்ப்பவர்களை எகிப்தியர் மிகவும் வெறுக்கின்றனர் என்றார்.