ஆபிரகாம் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டிற்குப் போய், காதேசுக்கும் சூருக்கும் நடுவில் குடியேறி, பின் ஜெரரா நாட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் தம் மனைவி சாறாளைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், ஜெரரா மன்னனாகிய அபிமெலெக் தன் ஆட்களை அனுப்பி அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி செய்தான்.
ஆனால் (ஒரு நாள்) இரவு நேரத்தில் அபிமெலெக்குக்கு ஆண்டவர் கனவில் தோன்றி: இதோ, நீ அபகரித்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனென்றால், அவளுக்குக் கணவன் இருக்கிறான் என்றார்.
அவளை அவன் தன் சகோதரி என்றும், அவள் (அவனைத்) தன் சகோதரன் என்றும் சொல்லவில்லையா? நான் கபடில்லாத மனத்துடனும் பரிசுத்தமான கைகளுடனும் இதைச் செய்தேன் என்றான்.
அப்பொழுது கடவுள்: நீ கபடற்ற மனத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவோம். அதனால் தானே நமக்கு விரோதமாய் நீ பாவம் செய்யாத படிக்கும் உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவும் நாம் இடம் கொடுக்கவில்லை.
அதனால், நீ அந்தப் பெண்ணை அவள் கணவனிடம் அனுப்பிவிடு. அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை அனுப்பி விட நீ இசையாவிடில், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் (என்றார்).
அபிமெலெக் அவ்விரவில் தானே உடனே எழுந்து தன் ஊழியக்காரரையெல்லாம் வரவழைத்து, அந்த வார்த்தைகள் எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அந்த மனிதர்கள் எல்லாரும் மிகவும் திகிலடைந்தனர்.
பின் அபிமெலெக் ஆபிரகாமையும் வரவழைத்து: என்ன காரியம் செய்தீர்? நீர் என் மேலும் என் நாட்டின் மேலும் ஒரு பெரிய பாதகத்தைச் சுமத்துவதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? செய்யத் தகாததை எங்களுக்குச் செய்தீரே என்று சொல்லி, மீண்டும்:
ஆபிரகாம் மறுமொழியாக: இவ்விடத்தில் தெய்வ பயம் உண்டோ என்னவோ என்றும், என் மனைவியின் பொருட்டு இவ்வூரார் என்னைக் கொன்றாலும் கொல்வர் என்றும் என் மனத்திலே எண்ணிக் கொண்டேன் ஒரு வகையிலே;
மேலும் கடவுள் கட்டளைப்படி நான் என் தந்தையின் வீட்டை விட்டுப் புறப்பட விருக்கையில், நான் அவளை நோக்கி: நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்; அது என்னவென்றால், நாம் எவ்விடம் சென்றாலும் சரி, என்னை உன் சகோதரனெனச் சொல்வாய், என்று அவளிடம் சொல்லியிருந்தேன் என்றார்.
பிறகு சாறாளை நோக்கி: இதோ, உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக் காசு கொடுத்தேன். அந்தப் பணத்திலே கண்களை மறைக்கும் ஒரு முக்காடு வாங்கி, நீ எங்கே போனாலும், யார் அருகில் வந்தாலும், உன்முகம் எவருக்கும் தோன்றா வண்ணம் அதைப் போட்டுக் கொள். நீ ஒரு முறை சிக்கிக் கொண்டாய் என்பதை மறக்க வேண்டாம் என்றான்.