கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து உரிமை வாழ்வு நமக்கு அளித்தார். அதிலே நிலைத்திருங்கள். அடிமைத்தனத்தின் நுகத்தைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
விருத்தசேதனம் செய்து கொள்ளும் ஒவ்வொருவனுக்கும், மீளவும் நான் எச்சரித்து வலியுறுத்துவது. அவ்வாறு செய்பவன் யூதச் சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவன் ஆவான்.
கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு விருத்தசேதனமும் பயனற்றது; விருத்தசேதனமின்மையும் பயனற்றது, ஒன்றும் செய்ய இயலாது. தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே.
வேறுபட்ட கொள்கை எதையும் ஏற்க மாட்டீர்கள் என்பது ஆண்டவருக்குள் உங்களைப்பற்றி எனக்குள்ள உறுதியான நம்பிக்கை. ஆனால் உங்கள் மனத்தைக் குழப்புகிறவன் யாராயிருந்தாலும், அவன் தண்டனைத் தீர்ப்பை அடைவான்.
சகோதரர்களே, விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென நான் போதிப்பதாகச் சொல்லுகிறார்களே, அப்படியானால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்படவேண்டும்? நான் அவ்வாறு போதித்தால், சிலுவையால் வரும் இடறலுக்கு இடமே இல்லையே.
நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.
அந்த இயல்பு இச்சிப்பது தேவ ஆவிக்கு முரணானது. தேவ ஆவி விரும்புவதோ அவ்வியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளன; அதனால் தான் விருப்பமானதை உங்களால் செய்யமுடியாமல் இருக்கிறது.
சினம், கட்சி மனப்பான்மை பிரிவினை. பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை. இத்தகையவற்றில் ஈடுபடுவோர்க்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்று நான் ஏற்கனவே சொன்னதை இப்போதும் சொல்லி எச்சரிக்கிறேன்.