பின்னர் மக்கள் தலைவர்கள் என்னிடம் வந்து, "இஸ்ராயேல் மக்களும் குருக்களும் லேவியர்களும் கானானியர், ஏத்தையர், பெறேசையர், யெபுசெயர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அமோறையர் முதலிய நாட்டினரோடு சேர்ந்து, அவர்களுடைய வெறுக்கத்தக்க செயல்களில் பங்கு கொண்டனர்.
அதாவது, அவர்களின் புதல்வியரைத் தங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் மனைவியராகக் கொண்டனர். இவ்வாறு அர்ச்சிக்கப்பட்ட இனத்தவரான இஸ்ராயேலர் புறவினத்தாரோடு ஒன்றாகக் கலந்து விட்டனர். மக்கள் தலைவர்களும் ஆளுநர்களுமே இதற்கு வழிகாட்டிகள்" என்று சொன்னார்கள்.
இஸ்ராயேலுடைய கடிவுளின் சொல்லுக்கு அஞ்சிய யாவரும் அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவர்களின் குற்றத்தைக்குறித்துப் பேச என்னிடம் கூடி வந்தனர். நானோ மாலைப்பலி நேரம் வரை அந்தத் துயரோடு உட்கார்ந்திருந்தேன்.
என் கடவுளே, நான் உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எம் பாவங்கள் எம் தலைக்கு மேல் பெருகிற்று. எம் அக்கிரமங்கள் விண்ணைத் தொட்டு விட்டன.
எம் முன்னோர் காலந்தொட்டு இன்றுவரை நாங்கள் பெரும் பாவங்களைச் செய்துள்ளோம். எங்கள் பாவங்களின் பொருட்டல்லோ நாங்களும் எம் அரசர்களும் குருக்களும், புறவின அரசர்களின் கைக்கும் வாளுக்கும் அடிமைத்தனத்துக்கும் கொள்ளைக்கும் வெட்கக்கேட்டுக்கும் கையளிக்கப்பட்டோம்! இன்னும் எங்களுக்கு அதே நிலை தானே!
ஆனால் இப்பொழுது எம் கடவுளான ஆண்டவர் எம்மில் சிலரை மீதியாக வைக்கவும், தமது திருவிடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தரவும், எம் கண்களுக்கு ஒளியை அருளவும், எம் அடிமைத்தனத்தினின்று எங்களுக்குச் சிறிது மீட்பு அளிக்கவும் வேண்டி எம் கடவுளை நோக்கிச் சற்று மன்றாடினோம்.
நாங்கள் அடிமைகளாயிருந்தும் எம் கடவுள் எம்மைக் கைவிட்டு விடவில்லை. மாறாக, நாங்கள் உயிர் பிழைக்கவும், பாழடைந்து கிடந்த எங்கள் கடவுளின் ஆலயத்தைத் திரும்பக் கட்டி எழுப்பவும், யூதாவிலும் யெருசலேமிலும் எங்களுக்குத் தக்க பாதுகாப்பை அளிக்கவும், பாரசீக அரசர் முன் எமக்குத் தயை கிடைக்கவும் செய்தருளினார்.
நீர் உம் ஊழியரான இறைவாக்கினர் மூலம் கட்டளையிட்டவற்றை மீறிவிட்டோம்; நீர் அவ்விறைவாக்கினர் மூலம் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் குடியேறவிருக்கிற நாடானது புறவினத்தாரின் அசுத்தத்தினாலும் பிறநாடுகளின் அசுத்தத்தினாலும் அந்நாட்டை ஒரு முனை தொடங்கி மறு முனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளினாலும் தீட்டுபட்டிருக்கிறது.
ஆதலால் நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும் அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக விட்டுச்செல்லவும் வேண்டுமாயின், உங்களுக்கு இடையே பெண் கொள்வதும் கொடுப்பது இருக்கக்கூடாது; அன்றியும், அவர்களது சமாதானத்தையும் நலத்தையும் ஒருகாலும் நீங்கள் நாடக்கூடாது' என்றீரே.
நாங்கள் உம் கட்டளைகளை மீறாதபடிக்கும், இந்த அருவருப்புக்குரிய மக்களோடு மணவுறவு கொள்ளாதபடிக்கும் அன்றோ நீர் அவற்றையெல்லாம் செய்தருளினீர்? எஞ்சியிருக்கும் நாங்களும் அழிந்து போகும்படி நீர் எம்மீது கோபமாய் இருக்கிறீரோ?
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் இன்னும் உம்மால் மீட்படையக்கூடிய நிலையில் ஒரு சிறு தொகையினர் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ பாவக் கறை படிந்தவர்களாய் நாங்கள் உம் திருமுன் நின்று கொண்டிருக்கிறோம்! இந்நிலையில் எவனும் உம் திருமுன் உயிரோடு இருக்க முடியாது" என்று மன்றாடினேன்.