ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இரத்தம் சிந்திய நகருக்கு ஐயோ கேடு! இது ஒரு துருப்பிடித்த பானை, பிடித்த துருவை எடுக்க முடியாத பானை. ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு, அதிலுள்ளவற்றில் வேறுபாடு பார்க்காதே.
பிறகு பானையை நெருப்பின் மேல் வை, அது நன்றாகச் சூடேறட்டும், செப்பு நன்றாகக் காய்ந்துருகட்டும், அதன் அழுக்கு கரைந்து போகட்டும், பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
உன்னுடைய அருவருப்பான வேசிச்ததனமே அந்தத் துரு. நாம் உன்னைச் சுத்தப்படுத்த விரும்பியும், நீ உன்னுடைய அசுத்தத்திலிருந்து சுத்தமாகவில்லை; ஆகையால் நமது ஆத்திரம் உன் மேல் கொட்டித் தீருமட்டும் நீ சுத்தமாகவே மாட்டாய்.
ஆண்டவராகிய நாமே சொன்னோம்: பழிவாங்கும் நாள் வரத்தான் போகிறது; நாம் அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கு நாம் பின்வாங்கவோ, உன்னைத் தப்பவிடவோ, உன்மேல் மனமிரங்கவோ மாட்டோம்; உன் நடத்தைக்கும் அக்கிரமங்களுக்கும் தக்கபடி உனக்குத் தீர்ப்பளிப்போம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
ஆனால் சத்தமாய் இழவு கொண்டாடாதே; உன் தலைப்பாகை தலையில் இருக்கட்டும்; செருப்புகளைக் காலில் அணிந்திரு; உன் முகத்தை மூடிக்கொள்ளாதே; இழவு கொண்டாடுகிறவர் உண்ணும் உணவைப் புசிக்காதே."
இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் நாட்டில் பெருமை மிக்கதும், உங்கள் கண்களுக்கு இன்பந் தருவதும், அழியக்கூடாது என்று உங்கள் இதயம் விரும்பி ஏங்குவதுமான நமது பரிசுத்த இடத்தை நாம் பங்கப்படுத்தப் போகிறோம்; நீங்கள் யெருசலேமில் விட்டு வந்த உங்கள் புதல்வர் புதல்வியர் வாளுக்கு இரையாவார்கள்.
உங்கள் தலைப்பாகை தலையிலிருக்கும்; காலில் செருப்பு அணிந்திருப்பீர்கள்; நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள்; ஆனால் உங்கள் அக்கிரமங்களை நினைத்துச் சோர்வுற்று, ஒருவரையொருவர் பார்த்து விம்மித் தவிப்பீர்கள்.
இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பான்; அவன் செய்தது போல, காலம் வரும் போது நீங்களும் செய்வீர்கள்; அப்போது ஆண்டவராகிய இறைவன் நாமே என்பதை அறிவீர்கள்.'
மனிதா, நாம் என்றைக்கு அவர்களின் வன்மையான கோட்டை, அவர்களுடைய மகிழ்ச்சி, மகிமை, கண்களுக்கினிய காட்சி, உள்ளத்தின் ஆவல், அவர்களுடைய புதல்வர் புதல்வியர் முதலியவரை அவர்களிடமிருந்து எடுத்து விடுவோமா,
அன்றே உன் வாய் திறக்கப்படும்; தப்பி ஒடி வந்தவனிடம் நீ வாய்திறந்து பேசுவாய்; ஊமையாய் இருக்க மாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஒர் அடையாளமாய் இருப்பாய்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."