அவர்களுள் தமக்கையின் பெயர் ஒல்லா, தங்கையின் பெயர் ஒலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஒல்லா சமாரியாவையும், ஒலியா யெருசலேமையும் குறிக்கின்றன.
தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டு விடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் அவள் ஆடைகளை உரிந்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரை பிடித்துக் கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழமொழிக்காளானாள்.
அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பபிலோன் நகரத்தாரைப் போல் இடையில் கச்சை கட்டிக் கொண்டும், தலையில் தலைப்பாகை அணிந்தும், படைத்தலைவர்கள் போல் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள்.
பபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப்படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கெண்டாள்.
இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது.
ஆகையால், ஒலிபா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ யார்மேல் காமவெறியால் மோகங் கொண்டாயோ, யாருடன் தெவிட்டும் வரை காமச் செயல் புரிந்தாயோ, இதோ அவர்களை உனக்கு எதிராக எல்லாப் பக்கத்திலும் எழும்பச் செய்வோம்.
பபிலோனியரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, ஷோவா, கோவா என்னும் இடங்களில் உள்ளோரையும், அசீரியர்களையும், ஆசை மூட்டும் அழகுள்ள வாலிபர்களாகிய தலைவர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோரையும், குதிரை வீரர்களையும் நாம் கூப்பிடுவோம்.
அவர்கள் பெரிய கூட்டமாய் வண்டிகளோடும், தேர்ப்படை, காலாட்படைகளோடும் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவார்கள்; மார்க்கவசம், கேடயம், தலைச்சீரா முதலியவற்றை அணிந்து நாற்புறமும் வந்து உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள்; அவர்களுக்கு முன்பாக நாம் உன்னைத் தீர்ப்பிடுவோம்; அவர்கள் தங்கள் சட்டப்படி உன் மேல் தீர்ப்புக் கூறுவார்கள்.
இவ்வாறு, நீ எகிப்திலிருந்து கொண்டு வந்த வேசித்தனத்தையும் காமவெறியையும் ஒழியச் செய்வோம்; இனி நீ எகிப்தியரை ஏறிட்டும் பாராய்; அவர்களை நினைக்கவும் மாட்டாய்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் சகோதரி குடித்த பாத்திரத்தையே நீயும் குடிப்பாய், அது அகன்றது, ஆழமானது; நீ பரிகாசத்துக்கும் நகைப்புக்கும் உள்ளாவாய், ஏனெனில் அதில் அதிகம் இருக்கிறது.
ஆம், நீ அதைக் குடிப்பாய், முற்றும் குடித்து முடிப்பாய், உன் கூந்தலைப் பிய்த்துக் கொள்வாய், உன் கொங்கைகளைப் பீறிக்கொள்வாய், ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "மனிதா, ஒல்லா, ஒலிபா இவர்களைத் தீர்ப்பிடுவாயா? அப்படியானால் அவர்கள் செய்த அருவருப்பானவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டு.
ஏனெனில் அவர்கள் விபசாரம் செய்தனர்; அவர்கள் கைகள் இரத்தக் கறை படிந்துள்ளன; சிலைகளோடு வேசித்தனம் செய்ததுமல்லாமல், நமக்குப் பெற்ற பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்டார்கள்.
தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
தூதர்களை அனுப்பித் தொலை நாட்டிலிருந்து ஆண்களை அழைத்துவரச் சொன்னார்கள்; அவர்களும் வந்தார்கள். அவர்களுக்காக நீ குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களால் உன்னை அழகு படுத்தினாய்.
அவளோடு சிற்றின்பப் பிரியரான மக்கட் கூட்டம் களியாட்டம் புரிந்தது; பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அந்தப் பெண்களின் கைகளில் வளைகளையும், தலையில் சிறந்து மின்னும் முடியையும் வைத்தார்கள்.
ஆனால் நீதிமான்கள் அவர்களைக் குறித்து விபசாரிகள் என்றும், இரத்தம் சிந்திய பெண்கள் என்றும் தீர்ப்புக் கூறுவார்கள்; ஏனெனில் அவர்கள் விபசாரிகள்தான்; இரத்தக்கறை அவர்கள் கையிலிருக்கிறது."
ஆனால் உங்கள் முறைகேடான பாவம் உங்கள் மேல் தான் சுமத்தப்படும்; சிலைவழிபாட்டுக்குரிய தண்டனை உங்கள் மேலேயே விழும்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்."