அவர் என்னிடம் கூறியது: "மனிதா, எம்மை விட்டு அகன்று போன கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்களிடம் உன்னை நாம் அனுப்புகிறோம். அவர்களும் அவர்களின் தந்தையரும் இந்நாள் வரை எம் உடன்படிக்கையை மீறினார்கள்.
நாம் யாரிடத்தில் உன்னை அனுப்புகிறோமோ அவர்கள் விவேகமற்றவர்கள்; முரட்டுத்தனம் உள்ளவர்கள். நீ போய் அவர்களிடத்தில், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்.
நீ சொல்வதை அவர்கள் கேட்பார்களோ, கேட்டுப் பாவஞ் செய்யாமல் இருப்பார்களோ, தெரியாது; ஆயினும், தங்கள் நடுவில் இறைவாக்கினர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை அந்தக் கலகக்காரர்கள் அறிந்து கொள்ளட்டும்.
மனிதா, நீ அவர்களுக்கு அஞ்சாதே. தேள்களைப் போன்ற கொடியவர்கள் நடுவில் வாழ்ந்தாலும், அவர்கள் விசுவாசமற்றவர்களாயும் கலகக்காரராயும் இருந்தாலும், அவர்கள் வார்த்தைக்கு அஞ்சாதே; அவர்கள் சொல்லுக்கோ, அவர்களின் கடுகடுப்பான முகத்துக்கோ அஞ்சி விடாதே; அவர்களோ கலகக்காரர்கள்.
மனிதா, அந்தக் கலகக்காரரைப் போல் நீயும் கலகக்காரனாய் இராதே; நாம் உனக்குச் சொல்வதைக் கேள்: உன் வாயைத் திறந்து உனக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் புசி."