அவர்களுக்குச் சொல்: சிங்கங்கள் நடுவில் உன் தாய் ஒரு பெண் சிங்கமாய் விளங்கினாள். இளஞ் சிங்கங்கள் நடுவில் படுத்துறங்கித் தன் குட்டிகளுக்குப் பாலூட்டினாள்.
சங்கிலியால் அதைக் கட்டிக் கூட்டிலடைத்து, பபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். அதன் குரல் (கர்ச்சனை) இஸ்ராயேல் மலைகளில் கேட்காதிருக்கும்படி அச்சிங்கத்தைச் சிறைக்கூடத்தில் அடைத்தார்கள்.
உன் தாய் திராட்சைத் தோட்டத்தில் நீரருகில் நடப்பட்ட ஒரு செழிப்பான திராட்சைக் கொடி போல் இருந்தாள். நீர் வளத்தின் காரணத்தால் கிளைகளும் கனிகளுமாய்த் தழைத்திருந்தாள்.
ஆனால் அத் திராட்சைக் கொடி ஆத்திரத்தோடு பிடுங்கப்பட்டு மண்ணிலே எறியப்பட்டது; கீழைக் காற்றினால் காய்ந்து போனது, அதன் கனிகள் பறிக்கப்பட்டன; அதன் உறுதியான கிளை உலர்ந்து போனது, நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டது.
அதன் உயர்ந்த கிளையினின்று நெருப்பு கிளம்பி, கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது; இனி அதில் உறுதியான கிளையில்லை, அரசனுக்குச் செங்கோலில்லை. இதுவே புலம்பல், புலம்பலாக பயன்படும் பாடல்.