ஆனால், அவன் தலைவன் அவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுத்து அவள் அவனுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றிருப்பாளாயின், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் தலைவனுக்கே சொந்தம்.
அவன் தலைவன் அவனை மக்கட் தலைவர்களிடம் அழைத்துச் சென்று, அவனைக் கதவின் அருகேயாவது அல்லது கதவு நிலைகளின் அருகேயாவது இருத்தி, அவன் காதைக் கம்பியினாலே குத்துவான். அதன் பின் அவன் என்றென்றும் அவனுக்குப் பணிவிடை செய்யக் கடவான்.
ஒருவன், தன் மகளை வேலைக்காரியாக விற்றுவிட்டானாயின், வேலைக்காரர்கள் விடுதலை பெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது. அவளை வாங்கின தலைவனுக்கு அவள் பிடிக்கவில்லையென்றால் அவன் அவளைப் போக விடுவான்.
பிறகு அவன் அவளுக்குப் பதிலாக வேறொரு மனைவியைத் தன் மகனுக்குக் கொடுப்பானாயின், மேற்சொன்ன பெண்ணுக்கு உணவும் உடையும், வேறொரு திருமணத்திற்குச் செலவும், அவள் கன்னிமை நட்டத்துக்குப் பரிகாரப் பணமும் ஆகிய இவற்றில் குறைவு செய்யாமல் கொடுக்கக்கடவான்.
பிறகு எழுந்திருந்து தன் கோலை ஊன்றி வெளியே நடமாடினால், அடித்தவன் அவனுக்கு உண்டான மானக்கேட்டைப் பற்றியும் நட்டத்திற்குப் பரிகாரம் செய்தால் குற்றமில்லாதவனாய் இருப்பான்.
மனிதர்சண்டையிலே ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின், அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான்.
யாரேனும் ஒருவன் தன் அடிமை ஊழியனையோ ஊழியக்காரியையோ கண்ணில் அடித்ததினாலே அவர்கள் கண் குருடரானால், பழுதுபட்ட கண்ணுக்குப் பதிலாக அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
ஒரு மாடு ஆடவனையோ பெண்ணையோ முட்டினதினால் அவர்கள் இறந்தால், அந்த மாடு கல்லால் எறியப்படவேண்டும். அதன் இறைச்சியை உண்ணலாகாது. ஆனால், மாட்டின் உரிமையாளன் குற்றவாளி ஆகமாட்டான்.
ஆயினும், தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடு என்று மக்கள் அவனுக்குத் தெரிவித்திருந்தும், அவன் அதைக் கட்டி வைக்காததினாலே அது ஓர் ஆடவனையோ பெண்ணையோ கொன்றிருந்தால், மாடும் கல்லால் எறியப்பட வேண்டும்; மாட்டின் உரிமையாளனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
ஒருவனுடைய மாடு மற்றொருவனுடைய மாட்டைக் காயப்படுத்தினதனாலே ஒருவேளை அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை விற்று, இருவரும் அதன் விலையைப் பங்கிட்டு, செத்த மாட்டையும் பங்கிட்டுக் கொள்ளக் கடவார்கள்.
ஆனால், அந்த மாடு முட்டுகிற மாடென்று, அம்மாட்டின் உரிமையாளன் முன்பே அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்தால், மாட்டுக்கு மாடு கொடுத்து ஈடு செய்யக்கடவான். செத்த மாடோ அவனுடையது ஆக வேண்டும்.