ஓரேபிலே இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மோவாபியர் நாட்டிலே அவர்களோடு உடன்படிக்கை செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டார். அது பின்வருமாறு:
அப்பொழுது உங்கள் ஆடைகள் பழையதாய்ப் போனதுமில்லை; உங்கள் காலணிகள் பழுதாய்ப் போனதுமில்லை. நீங்கம் அப்பம் உண்டதுமில்லை; கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுவைக் குடித்ததுமில்லை.
உங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் விறகுக்காரனும் தண்ணீர்காரனும் நீங்கலாக, உங்கள் பாளையத்திற்குள் இருக்கிற அந்நியனுமாகிய எல்லா மக்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
அவர் உனக்குச் சொன்னபடியும் உன் மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்பவர்களுக்கு ஆணையிட்டருளியபடியும் உன்னைத் தம் மக்களாக ஏற்படுத்தித் தாம் உனக்குக் கடவுளாக இருப்பதற்காகவுமேயாம்.
ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சிலவேளை அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டபிற்பாடு தன்னைத்தானே நோக்கி: நான் என் மன விருப்பப்படி அக்கிரம வழியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு இனிப் பயமில்லை என்று வீண் எண்ணம் கொண்டு சொன்னாலும் சொல்லலாம். இது மழைநீரைக் குடிக்க விரும்பும் வேர். வெறிக்கக் குடித்த வேராலே உண்ணப்படுவதற்கு ஒப்பாகும்.
அப்படிப் பட்டவன்மேல் ஆண்டவர் இரங்கமாட்டார். அவருடைய கோபமும் எரிச்சலும் அவன்மேல் மிகக் கரிய புகையைப் புகைக்கும். இந்நுலில் எழுதப்பட்ட எல்லாச் சாபங்களும் அவன்மேல் விழும். ஆண்டவர் அவனுடைய பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவார்.
அப்பொழுது உங்களுக்குப் பின் வரும் தலைமுறைப் பிள்ளைகளும், இவர்களிடம் காலப்போக்கிலே பிறக்கும் சந்ததியார்களும் தொலைநாட்டிலிருந்து வரும் அந்நியர்களும் ஆண்டவர் இந்த நாட்டுக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் கண்டு,
அவர் தம்முடைய கோபத்தினாலும் சீற்றத்தினாலும் எரிச்சலினாலும் அவர்களைத் தங்கள் நாட்டினின்று துரத்திவிட்டு, இந்நாளில் அமைந்திருப்பதுபோல், அவர்களை வெளிநாட்டில் எடுத்தெறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.