கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை எடுத்துக் கூறுவதைத் தேவ வார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பைக் கடவுள் எங்களுக்குத் தந்தருளும் படி எங்களுக்காவும் செபியுங்கள். 'இம் மறைபொருளின் பொருட்டே நான் விலங்கிடப்பட்டிருக்கிறேன்.
அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு என்னைப் பற்றிய செய்தியெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார். அவர் நம்பிக்கைக்குரிய பணியாளர், ஆண்டவருடைய பணியில் என் உடனுழைப்பாளர்.
நம்பிக்கைக்குரிய அன்புத் தம்பி ஒனேசிமுவைக் கூட அனுப்புகிறேன். அவன் உங்கள் சபையைத் சேர்ந்தவன்தான். அவர்கள் இங்கு நடப்பதையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
யுஸ்து எனப்படும் இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே கடவுளுடைய அரசுக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருந்தனர்.
உங்கள் சபையைச் சார்ந்த எப்பாப்பிராவிடமிருந்தும் உங்களுக்கு வாழ்த்து, கடவுளுடைய திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றுவதில் முற்றும் தேறினவர்களாய், ஞான நிறைவில் நிலைத்து நிற்கும்படி கிறிஸ்து இயேசுவின் ஊழியரான அந்த எப்பாப்பிரா உங்களுக்காக எப்போதும் கவலையோடு செபித்துவருகிறார்.
இக்கடிகத்தை நீங்கள் வாசிக்கக் கேட்டபின், லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்கச் செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.