அப்போது, பிறவியிலேயே முடவனாயிருந்த ஒருவன் தூக்கிக்கொண்டு வரப்பட்டான்; கோயிலுக்குள் போகிறவர்களிடம் பிச்சைவாங்குவதற்காக நாள்தோறும் அவனைக் கோயிலின் 'அழகு வாயில் ' என்னும் வாசலருகில் வைப்பதுண்டு.
இராயப்பர் அவனிடம், "வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்; நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " என்று சொல்லி,
அவன் இராயப்பரையும் அருளப்பரையும் விடாமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கவே மக்களெல்லாரும் திகைப்புற்று, ' சாலொமோன் மண்டபம் ' என்னும் இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தனர்.
இராயப்பர் அதைக் கண்டு, கூட்டத்திற்குக் கூறியது: "இஸ்ராயேல் மக்களே, இதைக் கண்டு நீங்கள் வியப்பதேன்? எங்கள் சொந்த வல்லமையாலோ பக்தியின் பலத்தினாலோ இவனை நடக்கவைத்ததாக எண்ணி நீங்கள் எங்களை இப்படி விழித்துப் பார்ப்பதேன்?
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள், நம் முன்னோர்களின் கடவுள் தம் ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார்; நீங்களோ அவரைப் பகைவர்களிடம் கையளித்துவிட்டீர்கள்; பிலாத்து விடுதலைத்தீர்ப்பு அளித்தபோதும் பிலாத்துவின்முன் அவரை மறுதலித்தீர்கள்.
இதோ, உங்கள் கண்முன் நிற்கிறவன் உங்களுக்குத் தெரிந்தவன்; இயேசுவின் பெயர்மீதுள்ள விசுவாசத்தால், அவருடைய பெயரே இவனுக்கு வலுவூட்டியது; அவரால் உண்டாகிய விசுவாசமே, உங்கள் எல்லாருக்கும் முன்பாக, இவனுக்கு முழுக் குணம் அளித்துள்ளது.
இந்த இயேசு, அனைத்தும் புதிதாக்கப்படும் காலம் வரும்வரை, வானகத்தில் இருத்தல்வேண்டும். தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயிலாகக் கடவுள் அக்காலத்தைப்பற்றி அறிவித்திருந்தார்.
இவ்வாறு மோயீசன், ' கடவுளாகிய ஆண்டவர் என்னைப்போன்ற ஓர் இறைவாக்கினரை உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழச்செய்வார்; அவர் உங்களுக்கு என்ன சொன்னாலும் அதற்குச் செவிகொடுங்கள்.
"நீங்களோ இறைவாக்கினர்களின் புதல்வர்கள்; ' உன் வித்தின்வழியாக மண்ணுலகின் குலமெல்லாம் ஆசிபெறும் ' என்று கடவுள் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம் முன்னோருடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உரியவர்கள் நீங்கள்.
உங்களுக்கு அருள் வழங்கி, உங்களுள் ஒவ்வொருவனையும் அவன் தன் தீச்செயல்களினின்று விலக்குவதற்காக, கடவுள் தம் ஊழியரை உயிர்ப்பித்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.