சின்னப்பர் தலைமைச் சங்கத்தாரை நோக்கி, "சகோதரரே, நான் இந்நாள்வரை கடவுள் முன்னிலையில், யாவற்றிலும் என் மனச்சான்றின்படி நேர்மையாக வாழ்ந்து வந்தேன்" என்றார்.
அச்சங்கத்தில் ஒருசாரார் சதுசேயர், மற்றொரு சாரார் பரிசேயர் என்பதை அறிந்திருந்த சின்னப்பர் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன், பரிசேயரின் வழித்தோற்றலே. இறந்தோர் உயிர்த்தெழுவர் என்ற என் நம்பிக்கையைக் குறித்துத் தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்" என்று உரக்கக் கத்தினார்.
சபையும் இரண்டுபட்டது. ஏனெனில், சதுசேயர் உயிர்த்தெழுதலோ வானதூதரோ ஆவியோ உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பரிசேயரோ, இவையெல்லாம் உண்டென்று ஒப்புக்கொள்வர். எனவே, பேரிரைச்சல் எழுந்தது.
அப்பொழுது பரிசேயர் கட்சியைக் சார்ந்த மறைநூல் அறிஞர் சிலர் எழுந்து இவனிடத்தில் ஒரு தவற்றையும் காணோம்; ஓர் ஆவியோ, ஒரு வான தூதரோ இவனோடு பேசியிருந்தாலென்ன?" என்று வாதாடினர்.
இப்படி வாக்குவாதம் முற்றவே, சின்னப்பரைக் கண்டதுண்டமாக்கிவிடுவார்களோ எனப் படைத்தலைவன் அஞ்சி, படை வீரர்களை அனுப்பி அவரைக் கூட்டத்தின் நடுவிலிருந்து கோட்டைக்குக் கொண்டுபோகக் கட்டளையிட்டான்.
எனவே, நீங்கள் தலைமைச் சங்கத்தாரோடு சேர்ந்து அவனைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள்போல் நடித்து, அவனை உங்களிடம் கூட்டி வரும்படி படைத் தலைவனுக்குச் சொல்லுங்கள். அவன் வந்து சேருமுன், அவனைக் கொன்றுபோட நாங்கள் தயாராயிருக்கிறோம்" என்றனர்.
இப்படி, சின்னப்பருக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிபற்றிய செய்தி, அவருடைய சகோதரியின் மகனுக்கு எட்டியது. அவன் கோட்டைக்குப் போய், உள்ளே நுழைந்து சின்னப்பரிடம் இதைத் தெரிவித்தான்.
அவ்வாறே அவன் அவனைப் படைத்தலைவனிடம் அழைத்துச்சென்று, "சின்னப்பன் என்னும் கைதி என்னைக் கூப்பிட்டு இவ்விளைஞனை உம்மிடம் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டான். இவன் உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டியதிருக்கிறதாம்" என்றான்.
அதற்கு அவன், "யூதர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதன்படி, சின்னப்பரைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள் போல் நடித்து அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளைய தினம் கூட்டிக்கொண்டு வரும்படி உம்மைக் கேட்பார்கள்.
ஆனால், நீர் அவர்களை நம்பவேண்டாம். ஏனெனில், அவர்களில் நாற்பது பேருக்குமேல் அவரைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அவரைக் கொன்று போடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை எனச் சூளுரைத்துள்ளனர். யூதர்களின் வேண்டுகோளுக்கு நீர் இணங்குவீர் என எதிர்பார்த்து இவர்கள் தயாராயிருக்கிறார்கள்" என்றான்.
பின்பு அவன் நூற்றுவர் தலைவர் இருவரை அழைத்து, "இருநூறு காலாட்படைவீரரும், எழுபது குதிரை வீரரும், இருநூறு வேல் வீரரும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா நகருக்குப் புறப்படத் தயார் செய்யுங்கள். குதிரைகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.
மேலும், இவனுக்கெதிராகச் செய்யப்பட்ட சதியைக் குறித்து எனக்குச் செய்தி கிடைத்தது. எனவே, இவனை உம்மிடம் உடனே அனுப்பியுள்ளேன். இவனைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இவன்மேல் தங்களுக்குள்ள முறைப்பாடுகளை எல்லாம் உம்முன் எடுத்துரைக்கலாம் என அவர்களுக்கு அறிவித்திருக்கிறேன்."