அப்பொழுது சின்னப்பர் தொடர்ந்து கூறியது: "நான் ஒரு யூதன். சிலிசியா நாட்டிலுள்ள தர்சு நகரத்திலே பிறந்தவன். ஆனால் இந்த யெருசலேமில்தான் வளர்ந்தேன். கமாலியேலின் பாதத்தண்டை அமர்ந்து, நம் முன்னோரின் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கற்றேன். இன்று நீங்கள் எல்லோரும் கடவுள்மேல் ஆர்வம் கொண்டுள்ளதுபோல நானும் கொண்டிருந்தேன்.
பின்னும் நான், ' ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்? ' என்று கேட்டேன். அதற்கு ஆண்டவர், ' எழுந்து தமஸ்கு நகருக்குச் செல். நீ செய்யவேண்டியவை அனைத்தும் உனக்கு அங்கே தெரிவிக்கப்படும் ' என்றார்.
ஆண்டவர் தோன்றி, ' தாமதியாமல் யெருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில் என்னைப்பற்றி நீ அளிக்கும் சாட்சியத்தை இந்நகரத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ' என்றார்.
உம் சாட்சியான முடியப்பரின் இரத்தம் சிந்தப்பட்டபோது, நானும் அதற்கு உடன்பட்டு அங்கேயிருந்தேன். அவரைக் கொலை செய்தவர்களின் மேலாடைகளுக்குக் காவலாயிருந்தேன். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமே ' என்றேன்.
இதுவரைக்கும் அவர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு "ஒழியட்டும் இந்தப் பயல். இவன் உயிரோடு இருக்கவே தகுதியற்றவன்" என்று உரக்கக் கூவினர்.
மக்கள் இவ்வாறு அவருக்கு எதிராகக் கத்துவதன் காரணத்தைப் படைத்தலைவன் அறிய விரும்பி, அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோய்ச் சாட்டைகளால் அடித்து விசாரிக்க கட்டளையிட்டான்.
அவர்கள் அவரை வார்களால் அடிப்பதற்குக் கட்டியபொழுது சின்னப்பர் தமது அருகில் நின்ற நூற்றுவர் தலைவனிடம், "உரோமைக் குடிமகன் ஒருவனைச் சாட்டையால் அடிக்க உங்களுக்கு உரிமையுண்டோ? அதுவும் தண்டனைத் தீர்ப்பிடாமலே" என்றார்.
யூதர்கள் அவர்மேல் சாட்டிய குற்றம் யாது என்பதைப் படைத்தலைவன் சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பி, மறுநாள் அவரை விடுதலை செய்து, தலைமைக் குருக்களையும் தலைமைச் சங்கத்தார் அனைவரையும் கூடும்படி கட்டளையிட்டான். பின்னர், சின்னப்பரைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் நிறுத்தினான்.