மேன்மையிலும் இழிவிலும், தூற்றப்படினும், போற்றப்படினும், அனைத்திலும் நாங்கள் கடவுளின் பணியாளரென்றே நடத்தையில் காட்டுகிறோம். எங்களை வஞ்சகர் என்கிறார்கள்; நாங்களோ உண்மையுள்ளவர்கள்.
அறியப்படாதவர்கள் என்கிறார்கள்; ஆனால், எல்லாரும் எங்களை அறிவார். சாகவேண்டியவர்களைப் போல் இருந்தாலும், இதோ, உயிர் வாழ்கிறோம். நாங்கள் ஒறுக்கப்படுகிறோம்; ஆனால், சாவுக்கு இரையாவதில்லை.
துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்த் தென்படுகிறோம்; ஆனால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். நாங்கள் ஏழைகளாயினும், பலரைச் செல்வராக்குகிறோம். ஒன்றுமே இல்லாதவர்கள்போல் இருக்கிறோம்; ஆனால், அனைத்துமே எங்களுக்குச் சொந்தம்.
அவிசுவாசியோடு விசுவாசிக்குப் பங்குண்டோ? கடவுளின் கோயிலுக்கும் தெய்வங்களின் சிலைகளுக்கும் பொருத்த முண்டோ? உயிருள்ள கடவுளின் கோயில் நாம்தான்; இதைக் கடவுளே சொல்கிறார்: " அவர்களிடையே குடிகொள்வேன்; அவர்கள் நடுவில் நடமாடுவேன். அவர்களுக்கு நான் கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பர்.