எனவே, அவ்வலுவலை ஏற்பவர் பிறருடைய குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் திருமணம் புரிந்தவராய், மிதமிஞ்சிக் குடியாமல் விவேகம், நயமான நடத்தை, விருந்தோம்பல் கற்பிக்கும் ஆற்றல் ஆகிய நல்லியல்புகள் வாய்க்கப்பெற்று,
அவ்வாறே திருப்பணியாளர்கள் இரட்டை நாவுள்ளவர்களாகவோ, மதுபானப் பிரியர்களாகவோ, இழிவான முறையில் ஊதியம் தேடுபடுவர்களாகவோ இராது கண்ணியமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஒருவேளை நான் வரத் தாமதித்தால், நீர் கடவுளின் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இக்கடிதம் உணர்த்தும். இவ்வீடு உயிருள்ள கடவுளின் திருச்சபையே. அதுவே உண்மைக்குத் தூணும் அடிப்படையுமாகும்.
மெய்யாகவே, நமது விசுவாசத்தின் மறை பொருள் பெரியது, ஐயமே இல்லை. ஊன் உருவிலே அவர் தோன்றினார். தேவ ஆவியின் செயலாலே அவர் இறைவனுக்கு ஏற்புடையவரென விளங்கினார். வானத்தூதர்க்குத் தமைக் காண்பித்தார். புறவினத்தார்க்கு அறிவிக்கப்பெற்றார். விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பெற்றார். மாட்சிமையிலே அவர் விண்ணேற்பு அடைந்தார்.