அவரை நோக்கி "இதோ நீர் முதியவரானீர். உம் மக்கள் நீர் நடந்த வழியில் நடக்கிறதில்லை; எமக்கு நீதி வழங்க, மற்ற நாடுகளுக்கெல்லாம் இருப்பது போல் எங்களுக்கும் ஓர் அசரனை ஏற்படுத்தும்" என்று சொன்னார்கள்.
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "மக்கள் உன்னிடம் சொல்வதை எல்லாம் கேள். உன்னை அவர்கள் புறக்கணித்து விடவில்லை; நாம் அவர்களை ஆளவிடாதபடி நம்மைத்தான் புறக்கணித்து விட்டார்கள்.
அவர்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்ட நாள் முதல் இன்று வரை அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் இப்படித்தான். நம்மை விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடுவது போல உனக்கும் செய்கிறார்கள்.
மீண்டும், "உங்களை ஆளப்போகிற அரசனின் உரிமை இதோ. அவன் உங்கள் பிள்ளைகளை எடுத்துத் தன் தேர்களை ஓட்ட வைத்துக் கொள்வான்; தனக்குக் குதிரை வீரர்களாகவும், தன் நான்கு குதிரைத் தேருக்கு முன் ஓடுகிறவர்களாகவும் செய்வான்.
அவன் அவர்களை ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவர்களாகவும், தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், ஆயுதங்கள், தேர்கள் செய்கிறவர்களாகவும் ஏற்படுத்துவான்.
நீங்களே தேர்ந்து கொண்ட உங்கள் அரசனுக்கு எதிராய் நீங்கள் முறையிடும் நாள் வரும். ஆனால், நீங்களே அரசனை விரும்பினதால் ஆண்டவர் அந்நாளில் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார்" என்றார்.
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்து" என்றார். அப்போது சாமுவேல் மக்களைப் பார்த்து, "அனைவரும் தத்தம் நகருக்குச் செல்லலாம்" என்று கூறினார்.