ஆனால் சிறுவன் சாமுவேல் ஏலிக்கு முன்பாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்து வந்தான். அந்நாட்களில் ஆண்டவரின் வாக்கு மிகவும் அருமையாய் இருந்தது. வெளிப்படையான காட்சியும் இல்லை.
உடனே ஏலியின் அருகில் ஓடி, "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். அவர் "நான் கூப்பிடவில்லை; திரும்பிப் போய் தூங்கு" என்றார். அப்படியே சாமுவேல் திரும்பிப் போய்த் தூங்கினான்.
ஆண்டவர் மறுமுறையும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய், "என்னைக் கூப்பிட்டீரே: இதோ, நிற்கிறேன்" என்றான். ஏலி, "மகனே, நான் உன்னை அழைக்கவில்லை; திரும்பிப்போய்த் தூங்கு" என்று பதிலுரைத்தார்.
என்னை அழைத்தீரே; இதோ, நிற்கிறேன் என்றான். அப்போது ஆண்டவர் சிறுவனை அழைக்கிறதை ஏலி கண்டறிந்து சாமுவேலை நோக்கி, "நீ போய்த் தூங்கு. திரும்பவும் நீ அழைக்கப்பட்டால், 'ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்' என்று சொல்வாயாக" என்றார். சாமுவேல் திரும்பிப்போய்த் தனது இடத்தில் தூங்கினான்.
ஏனெனில், தன் புதல்வர்கள் மதிகெட்டு நடந்ததை அறிந்திருந்தும், அவன் அவர்களைக் கண்டிக்காததால், அக் கொடுமைக்காக அவனையும் அவன் வீட்டையும் என்றென்றும் தீர்ப்பிட்டுத் தண்டிப்போம் என்று முன்பே அவனுக்குத் தெரிவித்திருந்தோம்.
ஏலி அவனைப் பார்த்து, "ஆண்டவர் உன்னிடம் பேசியது என்ன? ஒன்றையும் மறைக்காதபடி சொல்ல உன்னை வேண்டுகிறேன். உனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளில் எதையாவது நீ என்னிடம் மறைத்தால், கடவுள் உன்னைத் தண்டிப்பாராக" என்றார்.
அவருக்குச் சாமுவேல் எல்லாக் காரியங்களையும் ஒளிக்காது வெளிப்படுத்தினான். அப்பொழுது ஏலி, "அவர் ஆண்டவர்; அவர் தமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்வாராக" என்று பதிலுரைத்தார்.
சாமுவேலுக்கு ஆண்டவர் முதலில் சீலோவில் தோன்றியதால் அவர் சொற்படி மறுமுறையும் சீலோவிலேயே அவனுக்குத் தோன்றலானார். சாமுவேல் இஸ்ராயேலர் அனைவருக்கும் கூறியவை நிறைவேறின.