அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுக்க இஸ்ராயேல் நாடெங்கும் பன்னிரு கண்காணிப்பாளர்கள் சாலமோனுக்கு இருந்தனர். அவர்கள் ஆண்டு முழுவதற்கும் மாதத்திற்கும் வேண்டியவற்றை எல்லாம் அனுப்பி வைத்தனர்.
அகிலுதின் மகன் பானா- இவன் தானாக், மகேத்தோ, சர்தானுக்கு அருகிலுள்ள பெத்சான் நாடெல்லாவற்றிற்கும், பெத்சான் முதல் ஜெஸ்ராயேல் நாட்டுக்குக் கீழ் உள்ள எக்மானுக்கு எதிரில் இருக்கும் அபேல்மேயுலா வரையிலுள்ள நாடுகளுக்கும் ஆளுநனாய் இருந்தான்.
நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். அவர்கள் சாலமோனுக்குப் பரிசுகள் கொடுத்து, அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.
கலைமான்கள், சிறுமான்கள், கவரிமான்கள், கொழுத்த பறவைகள் முதலியவற்றைத் தவிர கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும், நூறு ஆடுகளுமாகும்.
ஏனெனில், நதிக்கு அப்புறத்திலுள்ள தாப்சா முதல் காசா வரை உள்ள எல்லா நாட்டையும் அவர் ஆண்டு வந்தார். இந்நாட்டரசர் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர். சுற்றுப்புறம் எங்கனும் சமாதானம் நிலவிற்று.
சாலமோனின் வாழ்நாளெல்லாம், தான் முதல் பெர்சாபே வரையிலும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் இருந்த மக்கள் அச்சமின்றித் தத்தம் திராட்சைத் தோட்டத்திலும் அத்திமரச் சோலைகளிலும் நலமே வாழ்ந்து வந்தனர்.
மேற்சொன்ன அரச கண்காணிப்பாளர்கள் குதிரைகளுக்குத் தீனி போட்டு வந்தனர்; அத்தோடு சாலமோன் அரசரின் பந்திக்குத் தேவையானவற்றையும் மிகுந்த கவனத்துடன் குறித்த காலத்தில் கொடுத்து வந்தனர்.
மேலும், இவர்கள் தத்தமக்குக் குறிக்கப்பட்டிருந்தபடி அரசர் செல்லுமிடமெல்லாம் குதிரைகளுக்கும் மற்றக் கால்நடைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமை, வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு வருவது வழக்கம்.
ஏசுராயித்தனாகிய எத்தானிலும், ஏமான், ஷல்கோல், தொர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட அவர் அறிவில் சிறந்து விளங்கினார். அண்டை நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று.
லீபானிலிருக்கும் கேதுரு மரமுதல் சுவர் மேல் முளைக்கிற ஈசோப்புப் புல் வரை உள்ள மரவகைகளைக் குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மீன்கள் முதலியவற்றைக் குறித்தும் பேசினார்.