{#1யோர்தானுக்குக் கிழக்கே பங்கிடுதல் } ரூபனியருக்கும், காத்தியருக்கும் திரளான மாட்டு மந்தைகளும், ஆட்டு மந்தைகளும் இருந்தன. யாசேர் நாடும், கீலேயாத் நாடும் தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானது என அவர்கள் கண்டார்கள்.
ஆகிய நாடுகளை யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினார். அந்த நாடுகள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானவை. உங்கள் அடியாரான எங்களிடம் வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன.
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்குப் போய் நாட்டைப் பார்த்த பின்னர் யெகோவா இஸ்ரயேலருக்குக் கொடுத்த அந்த நாட்டிற்குள் அவர்களைப் போகவிடாமல் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
‘அவர்கள் என்னை முழு இருதயத்தோடு பின்பற்றவில்லை. ஆகையால், நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக்கொடுத்த அந்நாட்டை எகிப்திலிருந்து வெளியேவந்த இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையுமுடைய மனிதர்களில் ஒருவருமே காணமாட்டார்கள்.
கேனாசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறெவரும் அதைக் காண்பதில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் யெகோவாவை முழு இருதயத்தோடும் பின்பற்றினார்கள்’ என்றார்.
எனவே இஸ்ரயேலுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. யெகோவாவினுடைய பார்வையில் தீங்குசெய்த அந்த முழுதலைமுறையினரும் ஒழிந்துபோகும்வரை அவர் நாற்பது வருடங்களாக இஸ்ரயேலரை வனாந்திரத்திலே அலையச்செய்தார்.
நீங்கள் அவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகிப்போனால், அவர் திரும்பவும் இம்மக்களையெல்லாம் இந்தப் பாலைவனத்திலேயே விட்டுவிடுவார். இம்மக்களுடைய அழிவுக்கு நீங்களே காரணமாயிருப்பீர்கள்” என்றான்.
அப்பொழுது அவர்கள் அவனிடம் வந்து, “நாங்கள் இங்கே எங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குத் தொழுவங்களை அமைத்து, எங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பட்டணங்களையும் கட்ட விரும்புகிறோம்.
ஆனால் எங்கள் மக்களான இஸ்ரயேலரை அவர்களுடைய நாட்டிற்குக் கொண்டுசெல்லும் வரையும், நாங்கள் ஆயுதம் தாங்கி அவர்களுக்கு முன்னே போக ஆயத்தமாயிருக்கிறோம். அதேநேரம் எங்கள் பெண்களும், பிள்ளைகளும் அரணான பட்டணங்களில் வாழட்டும். அப்பொழுது இந்நாட்டு குடிகளிடமிருந்து அவர்கள் பாதுகாப்பாயிருப்பார்கள்.
யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் எங்களுக்குச் சொத்துரிமை கிடைத்திருப்பதனால், நாங்கள் யோர்தானின் மறுபக்கத்தில் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ளவும்மாட்டோம்” என்றார்கள்.
அப்படிச் செய்வீர்களானால் யெகோவாவுக்கு முன்பாக நாடு கீழ்ப்படுத்தப்படும்போது, நீங்கள் திரும்பிப்போகலாம். யெகோவாவுக்கும் இஸ்ரயேலருக்கும் வாக்குக்கொடுத்த உங்கள் கடமையிலிருந்தும் நீங்கள் நீங்கலாயிருப்பீர்கள். இந்த நாடும் யெகோவா முன்னிலையில் உங்கள் உடைமையாகும்.
“ஆனால் அவ்வாறு நீங்கள் செய்யத்தவறினால், நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவமே உங்களைக் கண்டுபிடிக்கும் என்பதும் உங்களுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கட்டும்.
நீங்கள் உங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பட்டணங்களைக்கட்டுங்கள். உங்கள் மந்தைகளுக்கு தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால், நீங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்யுங்கள்” என்றான்.
அவன் சொன்னதாவது: “காத்தியரும், ரூபானியரும் ஆயுதந்தரித்தவர்களாக யெகோவா முன்பாக யோர்தானைக் கடந்து உங்களுடன் சேர்ந்து யுத்தத்திற்கு வந்தால், அந்நாடு உங்களுக்குக் கிடைத்தவுடன் கீலேயாத் நாட்டை அவர்களுக்கு உரிமையாகக் கொடுத்துவிடுங்கள்.
நாங்கள் ஆயுதம் தாங்கியவர்களாக யெகோவாவுக்கு முன்பாக யோர்தானைக் கடந்து, கானானுக்குப் போவோம். ஆனால் நாங்கள் உரிமையாக்கும் சொத்தோ, யோர்தானுக்கு இக்கரையிலேயே இருக்கும்” என்றார்கள்.
எனவே மோசே, காத்தியருக்கும் ரூபனியருக்கும் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும், எமோரியரின் அரசன் சீகோனின் அரசையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் கொடுத்தான். பட்டணங்களோடும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளோடும் முழு நாட்டையும் அவர்களுக்கே கொடுத்தான்.
நேபோ, பாகால் மெயோன் பட்டணங்களையும் கட்டினார்கள். அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன. சிப்மா பட்டணத்தையும் கட்டினார்கள். அவர்கள் தாங்கள் திரும்பக்கட்டிய பட்டணங்களுக்கு வேறு பெயர்களை வைத்தார்கள்.