தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
“யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் [QBR] தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: [QBR] இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, [QBR] உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
மேலும், [QBR] “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; [QBR] அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான். [PE][PS]
{யூதரல்லாதவர்களுக்கு பவுலின் ஊழியம்} [PS] என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.
{ரோமபுரிக்குச் செல்ல பவுலின் திட்டம்} [PS] இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன்.
இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.
யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும்,
நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன்.