Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 90 Verses

1 ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக [QBR] எங்களுக்கு அடைக்கலமானவர். [QBR]
2 மலைகள் தோன்றுமுன்பும், [QBR] நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், [QBR] நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். [QBR]
3 நீர் மனிதர்களைத் தூளாக்கி, [QBR] மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். [QBR]
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் [QBR] நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது. [QBR]
5 அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; [QBR] தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; [QBR] காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QBR]
6 அது காலையிலே முளைத்துப் பூத்து, [QBR] மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும். [PE][PS]
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து [QBR] உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். [QBR]
8 எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், [QBR] எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். [QBR]
9 எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; [QBR] ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம். [QBR]
10 எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், [QBR] பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், [QBR] அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; [QBR] அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். [QBR]
11 உமது கோபத்தின் வல்லமையையும், [QBR] உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்? [QBR]
12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, [QBR] எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். [QBR]
13 யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? [QBR] உமது அடியார்களுக்காகப் பரிதபியும். [QBR]
14 நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, [QBR] காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். [QBR]
15 தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், [QBR] நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும். [QBR]
16 உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், [QBR] உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. [QBR]
17 எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; [QBR] எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; [QBR] ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். [PE]
×

Alert

×